"தல FANS.. 25 வருஷம் ஆகிடுச்சா?".. காதல் மன்னன் படம் பற்றி ட்வீட் செய்த பரத்வாஜ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித்குமார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "LEO, லால் சலாம் போன்ற பட பெயர்களை மாத்தனுமா?".. தொல். திருமாவளவன் வைரல் பதில்!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது.

துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் தியேட்டரை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் துணிவு படம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. உலக அளவிலும் நெட்பிளிக்ஸ் தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில் நடிகர் அஜித்குமார் லண்டன் பயணத்தை முடித்து விட்டு போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்களை நடிகை ஷாலினி அஜித்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

போர்ச்சுக்கல் பயணத்தை முடித்து விட்டு நடிகர் அஜித்  ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள ஸ்காட்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஸ்காட்லாந்து நாட்டின் சாலைகளில் கார் ஓட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகின. 

Images are subject to © copyright to their respective owners.

அடுத்ததாக நடிகர் அஜித், லைக்கா நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் காதல் மன்னன் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி இசையமைப்பாளர் பரத்வாஜ் ஒரு ட்வீட் செய்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

அதில், "25 வருடங்கள் ஆனதை  என்னால் நம்ப முடியவில்லை! தமிழில் எனது முதல் படம், அஜித்துடன் எனது முதல் படம்.  A (அஜித்) - B (பரத்வாஜ்) - C (சரண்) மும்மூர்த்திகளின் முதல் கூட்டணி. காதல் மன்னன் படத்தின் 25-வது ஆண்டை கொண்டாடும் அனைத்து தல ரசிகர்களுக்கும் நன்றி.. உன்னை பார்த்த பின்பு நான்.." என இசையமைப்பாளர் பரத்வாஜ் ட்வீட் செய்துள்ளார்.

Also Read | ஜெயம் ரவி நடிக்கும் 'அகிலன்'.. OTT & சேட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனங்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Bharadwaj Tweet about 25 Years Of Kadhal Mannan Ajith Kumar Saran

People looking for online information on 25 Years Of Kadhal Mannan, Ajith Kumar, Bharadwaj, Kadhal mannan will find this news story useful.