விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற தொடர்களில் ஒன்று. தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் இதுவரை 400 க்கும் மேற்பட்ட எபிசோட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த தொடரில் கோபி, தன் மனைவிக்கு துரோகம் செய்து, ராதிகாவோடு காதலில் இருப்பதும், அதை தொடர்ந்து மறைத்துக்கொண்டு வந்ததும் பரபரப்பாக சென்றன.
கண்டுபிடித்த ராதிகா
ஒருகட்டத்தில் ராதிகாவிற்கு கோபி மீது சந்தேகம் உருவாக, நிச்சயமாக அவரின் குடும்பத்தை பார்த்தே ஆக வேண்டும் என முடிவெடுக்கிறார். அப்படி ஒரு சூழ்நிலையில் தான், குடித்து விட்டு ராதிகா வீட்டிற்கு வரும் கோபி, மனைவி என்று கூறி, பாக்கியாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை ராதிகாவிடம் காண்பிக்கிறார். இதனைக் கண்டதும், கண்ணீர் விட்டு கதறும் ராதிகா, தான் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியின் உச்சத்திற்கே செல்கிறார். இதேபோல போதையில் வீட்டுக்கு செல்லும் கோபி அங்கும் உளறிவிட, பாக்கியாவுக்கும் சந்தேகம் வருகிறது.
ராதிகாவுக்கு முழு உண்மையும் தெரிந்தாலும், இன்னும் தன் தோழியான பாக்கியாவிடம் கோபியைப் பற்றிய உண்மையை சொல்லவில்லை. கோபி, தொடர்ந்து ராதிகாவையும், அவள் குழந்தை மயூரியையும் சந்திக்க வந்துகொண்டே இருக்கிறார். ராதிகா எவ்வளவு அவமானப்படுத்தினாலும் கோபி தொடர்ந்து வந்துகொண்டேதான் இருக்கிறார்.
அதிரடி முடிவெடுத்த ராதிகா
இதனால் இப்போது ராதிகா தன் மகளோடு மும்பைக்கு சென்றுவிடுவது என்ற முடிவை எடுத்துள்ளார். இதைத் தன் நெருங்கிய தோழியான பாக்கியாவிடம் சொல்கிறாள். இதனால் அதிர்ச்சியாகும் பாக்கியா, ராதிகாவை செல்லவேண்டாம் என கூறுகிறாள். ஆனால் பாக்கியாவின் வாழ்க்கை நல்லபடியாக இருக்கவேண்டும் என்றுதான் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கடவுளிடம் வேண்டிக்கொள்கிறாள் ராதிகா. ராதிகா மும்பைக்கு செல்வாளா? கோபி மனம் மாறி பாக்கியாவுடன் வாழ்வாரா? அடுத்து என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த வார பாக்கியலட்சுமி தொடர்.