“உங்க CHAPTER இனி இல்ல …” வெளியே துரத்திய ராதிகா… முடிவுக்கு வந்ததா கோபியின் லீலை?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் புதிய ப்ரோமோ வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | OTT-யில் இந்திய அளவில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயனின் ’டான்’… Netflix வெளியிட்ட லேட்டஸ்ட் update

பாக்கியலட்சுமி…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற தொடர்களில் ஒன்று. இந்த தொடர் இதுவரை 400 க்கும் மேற்பட்ட எபிசோட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த தொடரில் கோபி, தன் மனைவிக்கு துரோகம் செய்து, ராதிகாவோடு காதலில் இருப்பதும், அதை தொடர்ந்து மறைத்துக்கொண்டு வந்ததும் பரபரப்பாக சென்றன.
ஒருகட்டத்தில் ராதிகாவிற்கு கோபி மீது சந்தேகம் உருவாக, நிச்சயமாக அவரின் குடும்பத்தை பார்த்தே ஆக வேண்டும் என முடிவெடுக்கிறார். அப்படி ஒரு சூழ்நிலையில் தான், குடித்து விட்டு ராதிகா வீட்டிற்கு வரும் கோபி, மனைவி என்று கூறி, பாக்கியாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை ராதிகாவிடம் காண்பிக்கிறார். இதனைக் கண்டதும், கண்ணீர் விட்டு கதறும் ராதிகா, தான் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியின் உச்சத்திற்கே செல்கிறார்.  இதேபோல போதையில் வீட்டுக்கு செல்லும் கோபி அங்கும் உளறிவிட, பாக்கியாவுக்கும் சந்தேகம் வருகிறது.

தெருச்சண்டையில் இறங்கிய கோபி…

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ராதிகாவின் வீட்டுக்கு செல்லும் கோபி அங்கு குழந்தையிடம் பேசிக் கொண்டிருக்க, அதைப் பார்க்கும் ராதிகா கோபமாகி திட்டி அனுப்புகிறார். அப்போது அங்கு வரும் ராதிகாவின் முதல் கணவர் கோபியை வெறுப்பேற்ற, அவரைக் கடுமையாக தாக்குகிறார் கோபி. இதை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வேடிக்கைப் பார்க்கின்றனர். கோபி சென்றதும் ராதிகாவின் கணவர், அவரிடம் சென்று அசிங்கமாக பேச அவமானத்தில் குறுகிப் போகிறார் ராதிகா.

உங்க சேப்டர் முடிஞ்சு போச்சு…

தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் கோபி மறுபடியும் ராதிகாவை தேடி செல்ல, கோபத்தின் உச்சிக்கே செல்கிறார். எப்படியாவது ராதிகாவை சமாதானப்படுத்த துடிக்கும் கோபியை, ராதிகா “இனிமேல் உங்க சேப்டர் எங்க வாழ்க்கையில இல்ல கோபி” என்று சொல்லி அவமானப்படுத்தி வீட்டு விட்டு வெளியே துரத்துகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத கோபி அவமானப்பட்டு நிற்கிறார். இதனால் அடுத்தடுத்த எபிசோட்களில் என்ன நடக்க போகிறது என்பதைக் காண ரசிகர்களின் ஆவல் அதிகமாகியுள்ளது.

Also Read | உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’… பிரபல ஓடிடியில் ரிலீஸ்… எப்போது? முழு விவரம்

தொடர்புடைய இணைப்புகள்

Bhagyalakshmi serial engaging episode gopi Radhika clash

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Baakiyalakshmi Serial Episode, Vijay Television will find this news story useful.