விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்துவந்த ஆர்யன் மாற்றப்பட்டு இப்போது விகாஷ் நடிக்க உள்ளார்.
பாக்கியலட்சுமி தொடர்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மெஹா தொடர்களில் பாக்கியலட்சுமி தொடருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த தொடர் இதுவரை 360 எபிசோட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த தொடரில் சுசித்ரா, சதிஷ்குமார், திவ்யா சுரேஷ் மற்றும் ரேஷ்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் மையக் கதாபாத்திரங்களில் ஒன்றான செழியன் கதாபாத்திரத்தில் இதுவரை நடிகர் ஆர்யன் நடித்துவந்தார்.
செழியனாக ஆர்யன்:
ஆர்யன் நடித்த அந்த கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் இப்போது அவர் அந்த கதாபாத்திரத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் அவருக்கு பதிலாக செழியன் வேடத்தில் நடிக்க நடிகர் விகாஷ் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவலை நடிகர் விகாஷும் ஒத்துக்கொண்டுள்ளார். மேலும் ஏற்கனவே பாக்கியலட்சுமி தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துவருவதாகவும், விரைவில் தனது காட்சிகள் ஒளிபரப்பாகக் கூடும் எனவும் கூறியுள்ளார்.
யார் இந்த விகாஷ்:
விகாஷ் இதற்கு முன்னதாக ராஜப்பார்வை, தெய்வமகள், முள்ளும் மலரும், பொன்னுக்கு தங்க மனசு ஆகிய வெற்றிபெற்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர்தான். அந்த தொடர்களில் அவரின் நடிப்புக்குக் கிடைத்த வரவேற்பை வைத்தே இந்த வாய்ப்புக் கொடுக்கப்பட்டு இருக்கலாம். அதுமட்டுமில்லாமல் தொடரில் இருந்து விலகிய ஆர்யனைப் போலவே உருவ ஒற்றுமையும் கொண்டவர். அதனால் ரசிகர்களுக்கு பெரிய அளவில் வித்தியாசம் தெரியாது என்று நம்பலாம்.
1000 ஆயிரம் எபிசோட்கள்:
சீரியல்கள் எல்லாம் இப்போது 1000க்கும் மேற்பட்ட எபிசோட்களை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றன. இதனால் ஒரு மெகா தொடர் ஆரம்பித்து முடிவதற்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகின்றன. தினசரி ஒளிபரப்பாகும் சீரியல்களுகாக மாதத்தில் பெரும்பாலான நாட்கள் படப்பிடிப்பு நடக்கும். அதனால் சில தனிப்பட்ட காரணங்களால் நடிகர் நடிகைகள் நீண்ட காலத்துக்கு தொடர முடியாத சூழல் உருவாகும் போது இதுபோல தயாரிப்பு நிறுவனங்கள் வேறு நடிகர்களை தேர்வு நடிக்க வைக்கின்றனர். மக்களும் இந்த மாதிரியான முடிவுகளுக்கு தங்களைப் பழக்க படுத்திக் கொண்டு விட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.