தமிழகத்தில் 1990களில் பழங்குடி இருளர் இன மக்களின் மீது காவல் துறையினரால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறலுக்காக வழக்கறிஞர் சந்துரு (சூர்யா, பிரபல நீதியரசர் சந்துருவாக) நடத்தும் சட்டவழி அறப்போராட்டத்தை தழுவி உருவான திரைப்படம் ஜெய் பீம்.
Also Read | நயன்தாராவின் O2 படத்தைத் தொடர்ந்து கார்த்தியின் படத்தில் ரித்து.. கலக்கல் ஃபோட்டோ!
ஜோதிகா & சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், சூர்யா, பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் நடித்த இப்படத்தை த.செ.ஞானவேல் எழுதி, இயக்கினார். பழங்குடி இருளர் இன மக்களின் மீதான காவல்துறையினரின் மனித உரிமை அத்துமீறலை மையமாகக் கொண்ட இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில், வெளியாகி அனைவராலும் பாராட்டப்பெற்றது.
முன்னதாக நடிகர் சூர்யா, “பார்வதி அம்மா அவர்களின் பெயரில் 10 லட்சம் ரூபாய் தொகையை டெபாசிட் செய்து, அதில் இருந்து வருகிற வட்டி தொகையை மாதந்தோறும் அவர் பெற்றுக் கொள்ள வழி செய்ய முடிவு செய்திருக்கிறோம். அவர் காலத்திற்குப் பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அந்த தொகை போய்ச் சேரும்படி செய்யலாம்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக ஜெய்பீம் பட நிஜ செங்கேனியான பார்வதி அம்மாளின் கேரக்டரை திரையில் பிரதிபலித்திருந்தார் நடிகை லிஜோ மோல் ஜோஸ். அவருக்கு அண்மையில் நடந்த பிஹைண்ட்வுட்ஸ் 8வது கோல்டு மெடல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ்விருதை ராஜாக்கண்ணுவாக இப்படத்தில் நடித்த நடிகர் மணிகண்டன் வழங்கினார்.
இவ்விழாவில் தமிழக ரசிகர்கள் தன் மீது மிகவும் அன்பாக இருப்பதாக சொன்ன லிஜோ மோல் ஜோஸ், ஒரு நிமிடம் உறைந்து போனதுடன், “நிஜ செங்கேனி பார்வதி அம்மாவை ஸ்கிரீனில் தான் பார்த்தேன், அவரை சந்திக்கும் சூழல் அமையவில்லை. அவரை மேடையில் அழைக்க முடியுமா?” என கேட்டு எமோஷனல் ஆனார். அதன் பின் மேடையில் வந்த பார்வதி அம்மாளை பார்த்த லிஜோ மோல் ஜோஸ் அவருடன் சேர்ந்து விருதை பெற்றுக்கொண்டதுடன், பிஹைண்ட்வுட்ஸின் பெருமை மிகு ராம்ப் வாக் மேடையில் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்களின் ஆரவார சத்தத்துக்கு நடுவே வெற்றிநடைபோட்டார்.
Also Read | டிவி சீரியலில் RJ பாலாஜி & ‘சூரரைப்போற்று’ ஹீரோயின்.. வெளியான ப்ரோமோ