10 வருஷத்துக்கு முன்னாடி.. சோம் கலந்து கொண்ட விஜய் டிவி நிகழ்ச்சி... வைரலாகும் வீடியோ...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் தற்போது முக்கியமான போட்டியாளராக மாறி இருப்பவர் சோம். இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பைனல்ஸ் வரை வந்தவர். அதன் பின்னர் வேறு ஒரு துறையான 'மார்ஷியல் ஆர்ட்ஸ்' கற்று அதில் சிறந்து விளங்கி வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அவர் செய்யும் சேட்டைகள் பலவும் வைரலாகி வருகிறது. பலருக்கும் சோமீன் கள்ளங் கபடமில்லாத மனது பிடித்திருக்கிறது என்று சொல்லலாம்.

இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு தொகுத்து வழங்கிய 'அழகிய தமிழ் மகன்' என்ற நிகழ்ச்சியில்தான் அவர் பங்கேற்றார். இந்நிலையில் அந்த நிகழ்ச்சி வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதிலும் அதேபோலவே சிரித்துக் கொண்டே இருக்கும் அவரை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் இவர்  நடிக்கவில்லை, தாமாகவே இருக்கிறார் என்று கருத்து கூறி வருகின்றனர்.

10 வருஷத்துக்கு முன்னாடி.. சோம் கலந்து கொண்ட விஜய் டிவி நிகழ்ச்சி... வைரலாகும் வீடியோ...! வீடியோ

Tags : Som

Bggboss som in vijay tv show சோம் கலந்து கொண்ட விஜய் டிவி நிகழ்ச்சி

People looking for online information on Som will find this news story useful.