பிரபல நடிகையின் மர்ம மரணம்.. வீட்டை பரிசோதித்த போலீசாருக்கு கிடைத்த பரபரப்பு ஆதாரம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பெங்காலி நடிகை, பிதிசா டி மஜூம்தார் தான் தங்கி வந்த அபார்ட்மெண்ட்டில் உயிரிழந்து கிடந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ‘சுவாசமே சுவாசமே தேடல் இன்று… ’ SR பிரபு தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் ‘O2’ first single

மாடலாக இருந்து பின்னர் நடிகையாக மாறியவர் நடிகை பிதிசா டி மஜூம்தார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக, கொல்கத்தா பகுதியிலுள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் வாடகைக்கு தங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, தான் தங்கி வந்த அபார்ட்மெண்டிலேயே தூக்கில் தொங்கிய நிலையில், உயிரிழந்து கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

போலீசார் சோதனை

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடம் சென்ற போலீசார், கதவை உடைத்து, பிதிஷாவின் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவரின் உடலைக் கைப்பற்றிய போலீசார், அதனை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அவரது வீட்டிற்குள் சோதனைகளையும் மேற்கொண்டனர்.

அப்போது, அங்கிருந்து கடிதம் ஒன்றும் போலீசார் வசம் சிக்கியுள்ளது. இதனையடுத்து, பிதிஷாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், இதுவரை கிடைத்த தகவலின் படி, பிதிஷா தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா என்றும் போலீசார் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.

இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்

கடந்த 2021 ஆம் ஆண்டு, பிதிஷா நடித்திருந்த "Bhaar- The Clown" என்னும் குறும்படம், பெரிய அளவில் அவருக்கு வரவேற்பை பெற்று கொடுத்திருந்தது. இதனிடையே, திடீர் என பிதிஷாவிற்கு நடந்த முடிவு, பலரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கி உள்ளது.

பிதிஷாவின் மறைவுக்கு, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட, பெங்காலி டிவி நடிகை பல்லவி தற்கொலை செய்து கொண்டிருந்த செய்தியும், அதிகம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | நயன்தாரா - பிரித்வி ராஜ் இணையும் புதிய படம்.. அல்போன்ஸ் புத்ரன் போட்ட வைரல் ட்வீட்!

Bengali actress bidisha de majumdar found dead in her apartment

People looking for online information on Apartment, Bengali actress, Bidisha de majumdar will find this news story useful.