BREAKING: அசத்தலான மூன்று புதிய வெப்- சீரிஸ்! காமெடி, ரொமன்ஸ், ஹெய்ஸ்ட் என பக்கா ட்ரீட் இருக்கு!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Behindwoods திரைப்பட தொடர் என்ற பெயரில் BehindwoodsTV இல் புதிதாக 3 வலைத் தொடர்கள் (Web Series) தொடங்குகின்றன . 

நகைச்சுவை, ஹீஸ்ட் மற்றும் ரொமான்ஸ் என 3 வெவ்வேறு வகைமைகளில் ஹாஃப் கேர்ள் பிரண்ட், சென்னை ஹீஸ்ட் மற்றும் லவ் லைவ்ஸ் ஆகிய மூன்று வலைத் தொடர்கள் தொடங்கப்படுகிறது. Behindwoods ரசிகர்களை சுவாரஸ்யமான அதேநேரத்தில் நல்ல கருப்பொருள்களுடன் மகிழ்விக்க இந்த தொடர்கள் தயாராக உள்ளன.

முதல் தொடருக்கு Half Girlfriend என பெயரிடப்பட்டுள்ளது, இதில் நிக்கி, லாவண்யா, அர்ஜுன் ராம், ஆல்ஃபிரட் ஜோஸ், ராகுல் தத்தா, விமல் ஹாசன் நடிக்கின்றனர். யுவராஜ் டி எழுதி இயக்கியுள்ளார்.

இரண்டாவது தொடருக்கு Love Lives  என்று பெயரிடப்பட்டுள்ளது, இதில் விக்னேஷ் கார்த்திக், அக்னி, தேஜு அஸ்வினி, பூஜா சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இயக்குனர் சாயாஷ் எழுதி இயக்கியுள்ளார்.

மூன்றாவது தொடருக்கு - Chennai Heist என்று பெயரிடப்பட்டுள்ளது, இதில் கார்த்திக் சங்கர், சுவாதி தாஸ், தேவிகா, ஷினு சாக்கோ, அருண் சிவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள், அதுல் டி ஆர் எழுதி இயக்கியுள்ளார்.

நகைச்சுவை, கொள்ளை மற்றும் காதல் ஆகிய 3 வெவ்வேறு களங்களில் இந்த தொடர்கள், வருகிற ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் வெளியிடப்பட உள்ளன. 

BREAKING: அசத்தலான மூன்று புதிய வெப்- சீரிஸ்! காமெடி, ரொமன்ஸ், ஹெய்ஸ்ட் என பக்கா ட்ரீட் இருக்கு!!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Behindwoods web series Half Girlfriend Love Lives Chennai Heist

People looking for online information on Behindwoods, Chennai Heist, Half Girlfriend, Love Lives, Nikki, Vignesh Karthik, Web Series will find this news story useful.