நீங்க 90’S கிட்ஸா? ஸ்கூல் டேஸ் க்ரஷ் இருக்கா? இந்த கட்டுரையும் வீடியோவும் உங்களுக்குத்தான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா பிரச்சனையால் திரை உலகமே முடங்கிக் கிடக்க, அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை ஷூட்டிங்கும், ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்த திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

Advertising
Advertising

இந்த லாக்டவுன் காலகட்டத்தில் பலரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், பலருக்கு வரமாக அமைந்துள்ளது டிவி, ஓடிடி, யூ ட்யூப், சோஷியல் மீடியா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள்தான். அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு, அவர்கள் சும்மாவே ஃபோனில் மூழ்கியிருக்கக் கூடியவர்கள். இந்த லாக்டவுனில் அவ்வப்போது சாப்பிடவும் தூங்கவும் மட்டும் கணினி அல்லது மொபைல் திரையிலிருந்து வெளியேறி, மீண்டும் அதற்குள் புதைந்து தங்கள் இருப்பை மறக்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் மாற்று ஊடங்களில் வெளியாகும் வெப் தொடர்கள், யூட்யூப்பில் வெளியாகும் குறும்படங்களுக்கு தற்போது அதிக ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். சமீபத்தில் Behindwoods Tv-யில் வெளியான முதல் கனவே 2 என்ற குறும்படம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த குறும்படத்தின் கதை என்பதை தனியே பிரித்து சொல்ல முடியாது. அழகியலுடன் கூடிய மிக எளிமையான கதை (ஸ்பாய்லர்ஸ் வேண்டாம் என்று ஒரு வரியைக் கூட குறிப்பிடவில்லை) இதில் ஒவ்வொரு நொடியும் மனதுக்குள் ஆழச் சென்று சிறு அலைகளை எழுப்பத் தவறுவதில்லை.  நம் ஒவ்வொருவருக்கும் பால்யம் என்பது ஒரு மின்னல் கீற்றைப் போல நினைவுகளுக்குள்ளிருந்து அடிக்கடி மீண்டெழும்.  அப்போது நமக்குப் பிடித்தவர்களின் முகங்களும் அவ்வெளிச்சத்தில் மினுங்கும். ஒளியிலே தெரியும் அந்த தேவதைப் பிம்பங்கள்தான் மிச்சமிருக்கும் வாழ்க்கையின் சாரம்.

பள்ளிப் பருவம் என்பது கவலைகள் அதிகமில்லாமல் நண்பர்களுடன் சுற்றித் திரிந்த பருவம். தட்டான்களைத் துரத்துவது, பட்டாம்பூச்சிகளை வியப்பது, மணலில் புரண்டு விளையாடுவது என இயற்கையுடன் கொஞ்சமாவது இயைந்து வாழ்ந்த காலகட்டம் அது. அதிலும் தொண்ணூறுகளில் பிறந்தவர்கள்தான் இந்த அழகான காலகட்டத்தை கடைசிப் பிரதிகள்.

பம்பரம் சுற்றுவதும், காத்தாடி விடுவதும், நண்பர்களுடன் கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடுவதும், தெருத்தெருவாய் அதிவிரைவாக சைக்கிளில் சுற்றுவதும், கடலை போடுவதும், ரேடியோவில் பாட்டுக் கேட்பதும், எப்போதாவது படிக்கவும் என அவர்கள் நாள்களும் பொழுதுகளும் வண்ணமயமாக இருந்தன.

அதிலும் பதின் வயதில் காதலில் விழுந்தவர்களின் அவஸ்த்தைகளை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. வெகு சிலருக்கு துணிவு காதலை சொல்லும் தைரியம் இருந்தாலும், இந்த விஷயத்தில் மட்டும் ஆண்களில் பலர் இதயம் பட முரளிதான். ஒருவேளை நேசித்தவள் நிராகரித்துவிட்டால் என்ற பயம்தான் காதலை சொல்லாமல் இருக்கச் செய்கிறது. அதிலும் முதல் காதல் என்பது அவரவர் வாழ்வில் அரிதான பொக்கிஷம். இந்தக் குறும்படத்தில் நமக்குக் காணக் கிடைப்பது அதன் சில அழகான தருணங்கள். கொரோனா பிரச்சனையால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில்தான் கதைக்களனும் அமைக்கப்பட்டிருக்கிறது.

குறுகிய கால அவகாசத்தில் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் ரசனையுடன் ஒரு குறுங்காவியத்தை படைத்துள்ளார். கண்களில் ஆரம்பித்து இதயத்தில் முடியும் இல்லையில்லை இதயத்தினுள் அடைபட்டுக் கிடக்கும் காதலெனும் உணர்வெழுச்சியின் உச்சங்களை நவரசத்துடன் அள்ளித் தருகிறார். மெல்லிய இசை, உறுத்தாத இயல்பான வசனங்கள், சுபாஷ் செல்வம் மற்றும் பவித்ரா ஜனனியின் மிகையற்ற நடிப்பு, கவிதை போன்ற அழகான மேக்கிங் என்று முதல் கனவே குறும்படம் காதலால் நிரம்பித் ததும்பும் இதயங்களைப் பரவசப்படுத்துவதுடன், அனைவரையும் அந்தக் குடைக்குள் ஈர்த்துவிடுகிறது.

இயக்குனர் கெளதம் மேனனின் சமீபத்திய ஷார்ட் ஃப்லிமை ட்ரால் செய்தவர்களுக்கு பதிலடி தருவது, மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டுவது, தற்கால சினிமா, தற்போதைய குவாரண்டைன் என பல விஷயங்களைப் போகிற போக்கில் தொட்டுச் செல்கிறது இந்த குறும்படம்  வெகு நாள் கழித்து ஒரு தரமான ரொமான்ஸ் ஷார்ட் ஃப்லிம் பார்த்த நிறைவை இக்குறும்படம் தருகிறது. முதல் சீனிலிருந்து கடைசி வரை நீங்கள் பார்க்க விரும்பினால் உடனடியாக க்ளிக் செய்யுங்கள்

தொடர்புடைய இணைப்புகள்

Behindwoods short film Mudha Kanave 2 directed by Vignesh Karthik

People looking for online information on Covid 19, Lockdown, Mudhal kanave 2, Vignesh Karthik will find this news story useful.