BEHINDWOODS GOLD SHORT FILMS CONTEST : WEB SERIES இயக்க ஓர் அரிய வாய்ப்பு விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்தியாவின் முன்னணி டிஜிட்டல் மீடியா நிறுவனமான பிஹைண்ட்வுட்ஸ் 16 வருடங்களுக்கும் மேலாக, திரை ஊடகத்துறையில் வெற்றிகரமாக பணியாற்றிக்கொண்டு வருகிறது. தற்போது அரசியல், பொது நிகழ்வுகளுக்கான இணையதள செய்திகள், யூ-டியூப் காணொளிகள், பிரபலங்கள் முதல் எளியோர் வரையிலான பேட்டி, சமூக நலன்களுக்கான முன்னெடுப்பு, தொடர்ந்து மாதம் 10 கோடி இணையவாசிகளின் ஏகோபித்த ஆதரவுடன் நிகழும் பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் மெடல் விருது வழங்கும் விழா என விரிந்துகொண்டே போகும் பிஹைண்ட்வுட்ஸின் எல்லையற்ற பயணவழியில் இணைய ஓர் அற்புதமான தருணம் வந்துவிட்டது.

பிஹைண்ட்வுட்ஸ் நடத்தவிருக்கும் குறும்பட போட்டிகளில் கலந்துகொண்டு கோல்ட் மெடல், 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை வெல்ல ஓர் அரிய வாய்ப்பு, மற்றும் இந்த குறும்பட போட்டியில் வெல்பவருக்கு, கவிதாலயா தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பிஹைண்ட்வுட்ஸ் தயாரிக்கவுள்ள வெப் சீரிஸை இயக்குவதற்கான வாய்ப்பு தரப்படும். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில், எந்த வகையறாவிலும் 45 நிமிடங்களுக்கு மிகாத குறும்படத்தை பிஹைண்ட்வுட்ஸில் நடக்கவுள்ள குறும்படத் தேர்வு போட்டிக்கு அனுப்பி வையுங்கள். யூ-டியூப், விமியோ உள்ளிட்ட எந்த இணைய காணொளித் தளங்களிலும் பதிவேற்றப்பட்டு வெளியிடப்பட்டிருக்கக் கூடாது.

தேர்ந்தெடுக்கப்படும் 50 குறும்படங்களுக்கு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை ட்ரேடு செண்டரில்  Sunday, 08th December 2019, 3.30 pm மணி அளவில் நடக்கவிருக்கும், ‘குறும்படத்துக்கான பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் மெடல் விருது வழங்கும் விழாவில் சான்றிதழ்கள் வழங்கப்படுவதோடு, அவை பிஹைண்ட்வுட்ஸ் டிவி- இணையதளச் சேனலில் பதிவேற்றப்பட்டு ஒளிபரப்பப்படும். 

இந்த போட்டிக்கு உங்கள் குறும்படங்களை அனுப்பி வைக்க வேண்டிய கடைசி நாள்  Thursday, 10th Nov 2019, 11.59 PM. மேலும் விபரங்களுக்கு  https://www.behindwoods.com/gold-medals-2019/shortfilms/  என்கிற இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யுங்கள்.

Behindwoods Gold Short film contest-ல் பங்குபெற்று வெற்றி இயக்குநர்களையும், படங்களையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

பிஹைண்ட்வுட்ஸ் குறும்பட விழாவில் விருதுபெற்ற    ‘99’ படத்தை இயக்கியவர் தேசிங் பெரியசாமி. இவர் தற்போது ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி & வயாகோம்18 மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில், துல்கர் சல்மான் நடிப்பில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதேபோல்  ‘தருமி’ குறும்படத்துக்காக விருதுபெற்ற விகர்ணன் அஷோக் ,பெயரிடப்படாத திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார்.  இவரை அடுத்து  ‘சில்ற இல்ல பா’ குறும்படத்துக்காக விருதுபெற்ற விக்கி, சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெளிவர உள்ள புதிய திரைப்படத்தையும், ‘நான் 8’ குறும்படத்துக்காக விருதுபெற்ற ஷமீர் சுல்தான் நட்சத்திர இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் தயாரிப்பு நிறுவனமான Ondraga Entertainment-ன் கீழ் 'Weekend மச்சான்'  என்கிற வெப் சீரிஸையும் இயக்கியுள்ளனர்.

Behindwoods Gold Short Films Contest Starts on August 12

People looking for online information on BGM Best Short Film will find this news story useful.