FILM MAKERS, உங்கள் திறமையை உலகிற்கு காட்ட வேண்டுமா? வந்தாச்சு BEHINDWOODS '100-DAY MOVIE CHALLENGE'!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைப்படத்துறையில் சாதிக்க வேண்டும் என்று பெரும் கனவுகளோடு காத்திருக்கும் படைப்பாளிகளுக்கு, இதோ, வந்துவிட்டது உங்களுக்கான பொன்னான வாய்ப்பு!

Behindwoods '100-day Movie Challenge' போட்டியில் கலந்துக்கொண்டு, விருதுடன் கூடிய பரிசுத்தொகையும், சிறந்த அங்கீகாரமும் வென்றிடுங்கள்!

இந்த போட்டியில், முதல் பரிசு பெறும் சிறந்த படத்துக்கு 10 லட்ச ரூபாய் மற்றும் விருது, இரண்டாம் பரிசு பெறும் சிறந்த படத்துக்கு 5 லட்ச ரூபாய் மற்றும் விருது, மூன்றாம் பரிசு பெறும் சிறந்த படத்துக்கு 3 லட்ச ரூபாய் மற்றும் விருது வழங்கப்படும்.  தவிர 10 படைப்பாளிகளுக்கு சிறப்பு அங்கீகாரமும் 2 லட்ச ரூபாய் பணம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

முன்னணி திரைப் பிரபலங்களால் இந்த கெளரவம் வழங்கப்படுவதுடன் அவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும். இது இன்றிலிருந்து (பிப்ரவரி 25-ஆம் தேதி) தொடங்கும் ஒரு ‘100 நாள் திரைப்பட சேலஞ்ச்’.

மேற்படி திரைப்படம், தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில், எந்த வகையறா (Genre) திரைப்படமாகவும் இருக்கலாம். திரைப்படத்தின் குறைந்தபட்ச நீளம் 65 நிமிடங்கள். கோரமான வன்முறைக் காட்சிகள், DISTURBING காட்சிகள், பலாத்கார காட்சிகள், ADULT CONTENT-கள்,  போதைப்பொருள் பயன்படுத்துவது தொடர்பான காட்சிகள், ஆபாச மொழி பேசும் காட்சிகள் உள்ளிட்டவை அனைத்தும் நீங்கள் அனுப்பும் திரைப்படங்களில் தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும்.

திரைப்படத்தினை SUBMIT செய்வதற்கான கடைசி நாள் - 2021, ஜூன் 4-ஆம் தேதி, இரவு 11:59 PM. நீங்கள் அனுப்பும் திரைப்படம் எந்த YOUTUBE சேனலிலும், VIMEO உள்ளிட்ட எந்த வீடியோ பிளாட்ஃபார்ம்களிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கக் கூடாது. அத்துடன் வெற்றிபெறும் மற்றும் தேர்வாகும் திரைப்படங்கள் BEHINDWOODS PLATFORMS-ல் அப்லோடு செய்யப்பட்டு புரோமோட் செய்யப்படும். ஆகையால், இந்த நிபந்தனைக்கு ஆட்சேபணை இல்லை என்று தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ஒரு NOC ஒப்பந்தத்தையும் படைப்பாளிகள் அளிக்க வேண்டும்.

அத்துடன் திரைப்படத்துக்கான பதிவுக் கட்டணமான 2500 ரூபாயை செலுத்தி, விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து,  உங்கள் படத்தின் UNLISTED YOUTUBE LINK-ஐ இணைப்பதற்கும், மேற்கொண்டு சந்தேகம், கேள்வி உள்ளிட்ட விபரங்களுக்கும் இந்த Link-ஐ Click செய்யவும்.

https://www.behindwoods.com/goldmovies/

Behindwoods Gold Movie 100 day challenge FilmMakers

People looking for online information on BehindwoodsGoldMovieChallenge will find this news story useful.