பிரம்மாண்ட BEHINDWOODS GOLD MEDALS விருதுகள் - டிக்கெட் ரிசர்வ் செய்யப்படுகிறது..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்தியாவின் முன்னணி டிஜிட்டல் மீடியா நிறுவனமான பிஹைண்ட்வுட்ஸ் சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக, திரை ஊடகத்துறையில் வெற்றிகரமாக பயணித்து வருகிறது. தற்போது அரசியல், பொது நிகழ்வுகளுக்கான இணையதள செய்திகள், யூ-டியூப் காணொளிகள், பிரபலங்கள் முதல் எளியோர் வரையிலான பிரத்யேக பேட்டிகள், சமூக நலன்களுக்கான முன்னெடுப்பு, தொடர்ந்து மாதம் 10 கோடி இணையவாசிகளின் ஏகோபித்த ஆதரவுடன் பல புதிய முயற்சிகளுடன் முன்னேற்றத்திற்கான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்த முன்னேற்ற பாதையின் ஓர் மைல்கல்லாக அமையும் Behindwoods Gold Medals விருது வழங்கும் விழா கடந்த 2014ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. திரைத்துறையில் சிறந்து விளங்கும் பிரபலங்கள் மட்டுமின்றி சமூக ஈடுபாடு மிகுந்த ஆளுமைகளையும் கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் Behindwoods Gold Medals என்ற பிரம்மாண்ட விருது விழா வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. திறமைகளை பாராட்டி கௌரவிக்கும் இவ்விருது விழாவை பொழுதுபோக்காக நடத்தாமல், விருது பெறும் வெற்றியாளர்களை கௌரவிக்கும் நோக்கில் நடத்தப்படும் இவ்விழா ஓர் தனித்துவமான விருது விழாவாக இருந்து வருகிறது.

அதன்படி, வெற்றிகரமாக 7வது ஆண்டாக நடைபெறவிருக்கும் Behindwoods Gold Medals விருது விழா வரும் டிசம்பர்.8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் செண்டரில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கண்டு களிக்க https://www.behindwoods.com/gold-medals-2019/tickets/ என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து உங்கள் டிக்கெட்டுகளை புக் செய்துகொள்ளுங்கள்.

சமீபத்தில் இசையை வழங்கும் இசை கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக Behindwoods நிறுவனம்  முதல் முறையாக மிகவும் பிரம்மாண்டமாக Behindwoods Gold Mic Music Awards என்ற விருது நிகழ்ச்சியை வெற்றிகரமாக அரங்கேற்றியது குறிப்பிடத்தக்கது.

Behindwoods Gold Medals awards 7th Edition Book tickets now

People looking for online information on Behindwoods Gold Medals will find this news story useful.