'ரெய்னா தமிழில் பாடிய பாட்டு!'.. BEHINDWOODS GOLD ICON AWARDS வேறலெவல் MOMENTS வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

7 வருட தொடர் வெற்றிகரமான கோல்டு மெடல் விருது நிகழ்வுகளுக்கு பிறகு Behindwoods-ன் மற்றும் ஒரு கிரியேட்டிவான முன்னெடுப்பாக அண்மையில் கடந்த மார்ச் 7-ஆம் தேதி நடந்தது Behindwoods Gold Icons - டிஜிட்டல், டெலிவிஷன் மற்றும் சமூகவலைதள விருதுகள்.

இந்த விருது விழாவில் டிவி சேனல், டிஜிட்டல் தளங்களில் இயங்கும் பலரும் விருது பெற்றனர். சூரரைப் போற்று நாயகி அபர்ணா பாலமுரளி, இயக்குநர் சுதா கொங்காரா உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்த இந்த நிகழ்வில் பவித்ரா, ஷபனா, சாந்தினி உள்ளிட்ட பல்வேறு சின்னத்திரை தொடர்களின் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு விருதுகள் பெற்றனர்.

குறிப்பாக பூவையார், மாஸ்டர் பட நடிகர் அர்ஜூன் தாஸ், ஆரி, அஸ்வின், புகழ், சிவாங்கி, காளிதாஸ் ஜெயராம், செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விருதுகளை பெற்றனர். குறிப்பாக சின்ன தல மற்றும் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா கலந்துகொண்டு விருது பெற்றார். அவருக்கான விருதினை மாஸ்டர் திரைப்படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்கி சிறப்பித்தார். 

இந்நிலையில் ரெய்னா ‘முன்பே வா’ பாடலை பாடியது, அஸ்வின் சிவாங்கியுடன் நடனம் ஆடியது, சித்ராவின் குடும்பத்தினர் சித்ராவுக்காக பெற்ற விருது, அப்போது  “ஒரு கிளி மாதிரி சித்ரா.. அவளை வளர்த்தோம். அதை சாவடிச்சுட்டான்” என உருக்கமாக பேசியது, வடிவேல் பாலாஜியின் குடும்பத்தினர் வடிவேல் பாலாஜிக்காக விருது பெற்றது, அதில் வடிவேல் பாலாஜியின் வலி அதிகம் என்று  இயக்குநர் தாம்சன் பேசியது, ரசிகர்களுக்காக ரெய்னா விசில் போட்டது, சுனிதாவுடன் புகழ் கலாய்த்து பேசுவது, தொகுப்பாளர்கள் மா.கா.பா மற்றும் பிரியங்காவுடன் சேர்ந்து ரெய்னா மாஸ்டர் ஸ்டெப் போட்டது, என பல சுவாரஸ்யமான மற்றும் உருக்கமான நிகழ்வுகள் தொகுக்கப்பட்டு குட்டி டீசர் போல BehindwoodsTV சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

ALSO READ: 'கெட்ட வார்த்தையே கத்து தர மாட்றாங்க'.. நீங்க சிங்கிளா? - பிரியங்கா - சூர்யா ஜாலி பேட்டி!

'ரெய்னா தமிழில் பாடிய பாட்டு!'.. BEHINDWOODS GOLD ICON AWARDS வேறலெவல் MOMENTS வீடியோ! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Behindwoods Gold Icons Woeww moments exclusive video out

People looking for online information on Ashwin, BehindwoodsGoldIcons, Chithra, Pugazh, Sivaangi, SureshRaina, TelevisionDigitalAndSocialAwards, Vadivel Balaji will find this news story useful.