அள்ளுதே! வெளியானது BEHINDWOODS CELEBRITY DANCER 2021 தரமான டிரெய்லர் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 7 வருடங்களாக  Behindwoods Gold Medals விருது வழங்கும் விழா வெற்றிகரமாக நிகழ்ந்து வருகிறது.

Advertising
>
Advertising

இதனைத் தொடர்ந்து சமூக சாதனையாளர்களை கவுரவிக்கும் Behindwoods gold Icons - Honour of Inspiration, இசை மற்றும் பாடல் துறை சாதனையாளர்களை கவுரவிக்கும் Behindwoods mic awards மற்றும் Behindwoods விருதுகளின் மற்றுமொரு அங்கமாக டிஜிட்டல் மற்றும் சோஷியல் மீடியா துறைகளில் சாதனை படைப்பவர்களை கவுரவிக்கும் பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு டிஜிட்டல் & டிவி விருதுகள் (Behindwoods Gold Digital & TV Awards) வழங்கு விழாக்களும் ஏகோபித்த நன்மதிப்பை பெற்றன.

இந்நிலையில் டிஜிட்டல் ஹிஸ்டரியில் முதல் முறையாக Celebrity Star Dancer எனும் நிகழ்வு Behindwoods-ஆல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் டிரெய்லர் தற்போது Behindwoods-ல்  பிரத்தியேகமாக வெளியிடப்பட்டுள்ளது. நடுவர்களாக பிரபல டான்ஸ் மாஸ்டரான கலா மாஸ்டர் மற்றும் பாபா பாஸ்கர் மாஸ்டர் இந்நிகழ்வில் பங்குபெற்றுள்ளனர்.

பிஹைண்ட்வுட்ஸ் வீஜே நிக்கி, கலக்கப்போவது யாரு குரேஷி மற்றும் அறந்தாங்கி நிஷா தொகுத்து வழங்கிய இந்த நிகழ்வில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற அஷ்வின், ரித்திகா, சுனிதா, தீபா அக்கா, KPY பாலா மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் பங்குபெற்றனர்.

இதில் பேசிய அஷ்வின், “இப்போது எனக்கு அன்பு காட்டுபவர்கள் நான் ஜெயித்தால் அவங்க ஜெயித்த மாதிரி ஃபீல் பண்ற கூட்டம்தான் அவங்க.” என்று நெகிழ்கிறார். இதேபோல் சாண்டி மாஸ்டர் பேசும்போது, தான் இந்த ஸ்டேஜில் நிற்பதற்கு காரணம் என கலா மாஸ்டரை குறிப்பிட, உடனே எழுந்து வந்த நடுவர் கலா மாஸ்டர் சாண்டியின் வெற்றி இலக்கை அடையும் குறிக்கோளை பற்றி நெகிழ்ந்து பேசுகிறார்.

மேலும் பல நெகிழ்வான மற்றும் கொண்டாட்டமான தருணங்கள் அடங்கிய இந்நிகழ்ச்சியின் பிரத்தியேக நிகழ்வுத் தொகுப்புகள் அடங்கிய வீடியோக்கள் ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளி அன்று மதியம் 3.30 மணிக்கும்  BehindwoodsTV-யில் வெளியாகவுள்ளன.

அள்ளுதே! வெளியானது BEHINDWOODS CELEBRITY DANCER 2021 தரமான டிரெய்லர் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Behindwoods celebrity dancer 2021 official trailer video

People looking for online information on Ashwin Kumar, Behindwoods, Behindwoods celebrity dancer 2021 trailer, Behindwoods celebrity dancer 2021official, Behindwoods Gold Icons, Behindwoods Gold Medal Awards, Behindwoods Gold Medals, Cook With Comali2, Oviya, Rithika, Trailer video, Trending, Video, Vijay tv will find this news story useful.