அக்கினேனி நாகார்ஜுனா, நாக சைதன்யா இணைந்து நடிக்கும் பங்கராஜு படத்தின் படப்பிடிப்பு இன்று (25.08.2021) ஐதராபாத்தில் தொடங்கியது. கல்யாண் கிருஷ்ண குரசாலா இயக்கிய சோகடே சின்னி நாராயணா நாகார்ஜுனாவுக்கு அதிக வசூல் பெற்றுத்தந்த திரைப்படமாகும்.

இந்த கூட்டணி அதன் தொடர்ச்சியாக இரண்டாவது பாகமாக பங்கராஜு என்ற தலைப்பில் இந்த படத்தில் மீண்டும் இணைகின்றனர். மேலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தில் நாகார்ஜுனாவின் மூத்த மகன் அக்கினேனி நாக சைதன்யா மற்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
புகழ்பெற்ற தந்தை-மகன் ஜோடி முன்பு விக்ரம் குமாரின் மல்டி-ஸ்டார் படமான மனத்தில் ஒன்றாக தோன்றியது, இது எல்லா காலத்திலும் கிளாசிக் பிளாக்பஸ்டரில் ஒன்றாகவும், உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு மறக்கமுடியாத படங்களில் ஒன்றாக அமைந்தது.
சோகடே சின்னி நாராயணாவில் நாகர்ஜூனுக்கு ஜோடியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் இதிலும் ஜோடியாகிறார். நாக சைதன்யாவின் காதல் கதாபாத்திரத்தில் நடிக்க கிருத்தி ஷெட்டியை ஒப்பந்தம் செய்துள்ளனர். அனுப் ரூபன்ஸ் படத்திற்கு இசையமைக்கிறார். சத்யானந்த் திரைக்கதை எழுதியுள்ளார், யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஜீ ஸ்டுடியோஸ், அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது
நடிப்பு: அக்கினேனி நாகார்ஜுனா, நாக சைதன்யா, ரம்யா கிருஷ்ணா, கிருதி ஷெட்டி, சலபதி ராவ், ராவ் ரமேஷ், பிரம்மாஜி, வென்னெலா கிஷோர் மற்றும் ஜான்சி
தொழில்நுட்ப குழு:
கதை & இயக்கம்: கல்யாண் கிருஷ்ண குரசாலா
தயாரிப்பாளர்: அக்கினேனி நாகார்ஜுனா, ஜீ ஸ்டுடியோஸ், அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட்
திரைக்கதை: சத்யானந்த்
இசை: அனூப் ரூபன்ஸ்
ஒளிப்பதிவு : யுவராஜ்
கலை இயக்குனர்: பிரம்மா காடலி
மக்கள் தொடர்பு: வம்சி-சேகர்