ஆசியாவின் முதல் முயற்சியாக ஒரே திரையில் இரண்டு படங்களாக "Beginning" என்கிற படம் உருவாகியுள்ளது.
லெஃப்டி மேனுவல் கிரியேஷன்ஸ் தயாரித்து ஜெகன் விஜயா எழுத்து மற்றும் இயக்கத்தில் வினோத் கிஷன், கௌரி ஜி கிஷன், சச்சின், ரோகினி, லகுபரன், மகேந்திரன், சுருளி, KPY பாலா ஆகியோர் நடித்து உருவாகியுள்ள படம் “Beginning”.
சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு வீரகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங்கை சி.எஸ்.பிரேம்குமார் மேற்கொள்ள, கலை இயக்குநராக கே.வி. முருகமணி பணிபுரிந்துள்லார். லெஃப்டி மேனுவல் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை மாஸ்டர் பீஸ் வெளியிடுகிறது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்ததுடன், ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆசியாவிலேயே முதன்முறையாக இரண்டு கதைகளைக் காட்டும் 'ஸ்பிளிட் ஸ்கிரீன்' உத்தியைப் பயன்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.
முதன்முறையாக தமிழ் சினிமாவில் இப்படியான 'வித்தியாசம்', 'புதிய அனுபவம்' பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தம் கொடுத்து முதன்முறையாக அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது “Beginning” திரைப்பட டிரெய்லர். இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்ட பலரும் இந்த டிரெய்லரை பகிர்ந்து வாழ்த்துக்களையும் ஆதரவுகளையும் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படத்தில், ஒரு கதை திரையின் இடது பக்கத்திலும், மற்றொரு கதை வலது பக்கத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டுமே ஒரே நேரத்தில் நடக்கும். அதே சமயம் பார்வையாளர்களும் குழப்பமடைய மாட்டார்கள்.
ஒரு டிராமா, ஒரு த்ரில்லர் வகையிலான இந்த இரண்டு கதைகளும் முற்றிலும் மாறுபட்ட நிகழ்வுகளை ஒரே நேரத்தில் பார்க்கும் ஒரு புதிய வகையான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்கிறது என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக்குழு விபரம்
எழுத்து மற்றும் இயக்கம்: ஜெகன் விஜயா
இசை: சுந்தரமூர்த்தி கே.எஸ்
ஒளிப்பதிவு: வீரகுமார்
எடிட்டர்: சி.எஸ்.பிரேம்குமார்
கலை: கே.வி. முருகமணி
தயாரிப்பு நிர்வாகி: மாரியப்பன் கணபதி
குரல் பதிவாளர்: தீலிபன் இரணியன்
ஆடியோகிராபர்: டோனி ஜே
கலவை: கருப்பு மற்றும் வெள்ளை
ஸ்டுடியோ: பயர்பாக்ஸ் ஸ்டுடியோ
நிறம்: ராஜேஷ் ஜே
VFX: முகமது அக்ரம்
ப்ரோ: ஜான்சன்
தயாரிப்பு: லெஃப்டி மேனுவல் கிரியேஷன்ஸ்
வெளியிட்டவர்: மாஸ்டர் பீஸ்
தயாரிப்பாளர்: விஜயா முத்துசாமி
இணை தயாரிப்பாளர்: பிரபாகரன் நாகரத்தினம், சுப்ரமணி பிரபாகரன், கோபி அண்ணா, பொன்னி பிரபு, அன்பரசி பாபு.