“10 வருஷமா ஏன் பேட்டி கொடுக்குறது இல்ல”…. நெல்சன் கேள்விக்கு விஜய்யின் பதில்? – வைரல் PROMO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸாவதை அடுத்து இயக்குனர் நெல்சன் அவரை நேர்காணல் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

பிரசவத்துக்குப் பிறகு முதல் முறையாக ரசிகர்களோடு உரையாடிய ஆல்யா மானசா! வைரல் ஸ்டோரி

விஜய் – நெல்சன் கூட்டணி…

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த நெல்சனும் மாஸ்டர் வெற்றிக்குப் பிறகு விஜய்யும் இணைந்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் பேன் இந்தியா ரிலீஸாக வெளியாகிறது.  இந்த படத்தில்  பூஜா ஹெக்டே, யோகி பாபு, ரெட்டின்ஸ் கிங்ஸ்லே,  செல்வராகவன், விடிவி கணேஷ் மற்றும் அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விஜய்யின் சமீபகால படங்களின் வெற்றியால் பீஸ்ட் படத்தின் மீது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது.

டிரைலர் கொடுத்த எதிர்பார்ப்பு…

கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி  பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இந்த டிரைலரில் வரும் ஆக்ஷன் காட்சிகள், விஜய் பேசும் வசனங்கள் ஆகியவை, விஜய் ரசிகர்களுகு goosebump தருணங்களாக அமைந்துள்ளன. தீவிரவாதிகளால் சென்னையில் உள்ள ஒரு முக்கியமான ஷாப்பிங் மால் ஹைஜாக் செய்யப்படுகிறது. அதில் எதிர்பாராத விதமாக ராணுவ உளவாளியான வீரராகவன் (விஜய்) மாட்டிக் கொள்கிறார். அவர் எப்படி அங்கிருந்து தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிடுகிறார் என்று காட்டப்படுகிறது. அதுபோலவே ராணுவ வீரரான விஜய்யின் மாஸ் ஆக்‌ஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

10 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யின் பேட்டி…

இந்த படத்தின் ரிலீஸை ஒட்டி 10 ஆண்டுகளுக்கு பிறகு, நடிகர் விஜய் அளிக்கும் பேட்டி ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.  இந்த நேர்காணலை படத்தின் இயக்குனர் நெல்சனே எடுத்துள்ளார். இதில்  உள்ள பல சுவாரஸ்யமான தருணங்களை குட்டி குட்டி ப்ரோமோக்களாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் இணையத்தில் பகிர்ந்து வருகிறது. இப்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் நெல்சன் விஜய்யிடம் ’10 வருஷமா ஏன் எந்தவொரு பேட்டியும் கொடுக்கல” எனக் கேட்கிறார். அதற்கு விஜய் ’ஒரு இன்சிடண்ட் நடந்தது 10 வருஷத்துக்கு முன்ன’ என சொல்லி அது பற்றி பேசுகிறார். இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

குட்டி ஸ்டோரியும் சைக்கிளும்

இதற்கு முன்னர் வெளியான இரு ப்ரோமோக்களில் நெல்சன் குட்டி ஸ்டோரி ஒன்றை நெல்சன் கேட்க, ஸ்டாக் இல்லை என விஜய் பதிலளிக்கிறார். ,"வேணும்னா பாக்கெட்'ல தேடி பாருங்க சார். எதுனா இருக்கும்" என கூறவே, "ஷூட்டிங் முடிஞ்சு போச்சுங்கிற தைரியத்துல இஷ்டத்துக்கு கேக்க வேண்டியது" என விஜய் கூறுகிறார். இன்னொரு ப்ரோமோவில், ஜாலியோ ஜிம்கானா பாடலை விஜய் பாடுவதும், வாக்களிக்க சென்ற போது, சைக்கிளுடன் ஏன் சென்றீர்கள் என நெல்சன் கேட்கும் கேள்விகளும் இடம்பெற்றுள்ளது.

”புடவை கட்டுறதுலாம் ஒரு..” .. 'பிரேமம்' அனுபமா பரமேஸ்வரன் latest pics! வைரல் போஸ்ட்..

தொடர்புடைய இணைப்புகள்

Beast Vijay nelson interview new promo viral

People looking for online information on Anirudh, Beast, Beast Vijay nelson interview, Nelson Dilipkumar, Pooja Hegde, Vijay will find this news story useful.