29 YEARS OF VIJAYISM: முக்கிய தயாரிப்பாளர் வெளியிட்ட COMMON DP! விஜய் ரசிகர்கள் செம மாஸ் கொண்டாட்டம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

Advertising
>
Advertising

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அன்பறிவ் சண்டைப்பயிற்சி அளிக்கின்றனர். ஜானி மாஸ்டர் நடனப் பயிற்சி அளித்து வருகிறார்.

படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதுவரை 100 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. 100வது நாளில் ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டனர். இந்நிலையில் விஜய் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி 29 வருடங்கள் ஆவதையொட்டி விஜய் ரசிகர்கள் 29 Years Of Vijayism என டிவிட்டரில்  டிரெண்ட் செய்து வருகின்றனர். 

இதனையொட்டி மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமார் ரசிகர்களுக்காக விஜய்யை வாழ்த்தி Common DP-யை ரிலீஸ் செய்துள்ளார். லலித் குமார் தவிர இயக்குனர் லோகேஷ் கனகராஜூம், நடிகர் பிரேன்ஜியும் Common DP-யை ரிலீஸ் செய்துள்ளனர். 

Tags : Vijay, Beast, Master

தொடர்புடைய இணைப்புகள்

Beast Vijay 29 Years Of Vijayism CDP released by master producer

People looking for online information on Beast, Master, Vijay will find this news story useful.