விஜய் குரலில் BEAST படத்தின் இரண்டாவது பாடல் எப்போ ரிலீஸ்? PROMO வீடியோவுடன் சூப்பர் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: பீஸ்ட் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் அப்டேட் குறித்து டிவீட் செய்துள்ளார்.

Beast Update on the way Nelson Dhilip kumar tweet
Advertising
>
Advertising

இயக்குனர் நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

Beast Update on the way Nelson Dhilip kumar tweet

இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு முன்னர் அறிவித்தனர்.  பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் நாள் அன்று வெளியாக உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்து ஜோனிதா காந்தியுடன் இணைந்து பாடியுள்ளார். 170 மில்லியன் வியூசை இந்த பாடல் கடந்துள்ளது.

இந்நிலையில் அடுத்த பீஸ்ட் அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக மோஷன் போஸ்டர், அடுத்த சிங்கிள், இசை வெளியீடு, புதிய போஸ்டர், அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி ஆகியன இதில் அடங்கும்.

அது போலவே இரண்டாவது சிங்கிள் பாடலை படக்குழு 19.03.2022 அன்று வெளியிட உள்ளது. ஜாலியா ஜிம்கானா எனும் பாடலை விஜய் பாடி, கார்த்திக் எழுத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த பாடலில் விஜய், நெல்சன், அனிருத் தோன்றியுள்ளனர். 

தொடர்புடைய இணைப்புகள்

Beast Update on the way Nelson Dhilip kumar tweet

People looking for online information on Beast, BeastSecondSingle JollyOGymkhana, Nelson Dhilipkumar, Second Single, Vijay will find this news story useful.