பீஸ்ட் பட சிங்கப்பூர் - வளைகுடா நாடுகளின் வினியோக உரிமை! கைப்பற்றிய வலிமை வினியோகஸ்தர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: பீஸ்ட் படத்தின் சிங்கப்பூர் வளைகுடா நாட்டு உரிமையை வலிமை படத்தின் பிரபல வினியோகஸ்தர் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Advertising
>
Advertising

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டர் நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாள்கிறார்.

தமிழ் புத்தாண்டு  தினத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை இந்த படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீஸ்ட் படத்தின் ஒட்டு மொத்த கர்நாடக தியேட்டர் வெளியீட்டு உரிமையை தீரஜ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ் நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. பீஸ்ட் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையையும் ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிறுவனம் அஜித் நடித்த பில்லா, ஏகன் படங்களையும், விஜய் நடித்த வில்லு படத்தையும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் சிங்கப்பூர், வளைகுடா நாடுகளின் வெளியீட்டு உரிமையை வலிமை பட வினியோகஸ்தரான Home Screen பொழுதுபோக்கு நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்த நாடுகளில் டிக்கெட் முன்பதிவும் துவங்கி உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Beast UAE & GCC Rights Bagged by Valimai Distributor

People looking for online information on Beast, GCC, Singapore, Valimai, Vijay will find this news story useful.