#BEASTTRAILERFROMAPRIL2: நீங்களும் வெயிட்டிங்கா?... ரசிகர்களை குஷியாக்கிய செல்வராகவனின் வைரல் POST!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படத்தின் டிரைலர் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertising
>
Advertising

நடிகர் விஜய், மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து நடிக்கும் பீஸ்ட் படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெட்டின்ஸ் கிங்ஸ்லே மற்றும் அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே இந்த படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது. வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி பேன் இந்தியா திரைப்படமாக ஐந்து மொழிகளில் பீஸ்ட் வெளியாக உள்ளது.

வைரல் ஹிட் ப்ரமோஷன்கள்…

இந்த படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உள்ளதால் படம் சம்மந்தமாக எந்த அப்டேட் வெளியானாலும் வைரல் ஹிட் ஆகி வருகின்றன. இதுவரை வெளியான அனைத்து போஸ்டர்களும் இணையத்தில் தீயாய் பரவின. அதுபோல படத்தில் இருந்து இதுவரை வெளியாகியுள்ள இரண்டு பாடல்கள் வைரல் ஹிட் ஆகியுள்ளன. முதல் சிங்கிளான அரபிக்குத்து பாடல் கடந்த பிப்ரவரி 14 அம் தேதி வெளியாகி இன்ஸ்டண்ட் ஹிட் ஆனது. இதுவரை யுடியூபில் இந்த பாடலை 200 மில்லியன் பேருக்கு மேல் பார்த்துள்ளனர். அதையடுத்து வெளியான செகண்ட் சிங்கிள் பாடலான ஜாலியோ ஜிம்கானா பாடலும் ரசிகர்களின் மனம்கவர்ந்த ஒன்றாக அமைந்துள்ளது. இந்த பாடலை விஜய் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேன் இந்தியா ரிலீஸ்…

பீஸ்ட் திரைப்படம் இந்தியா முழுவதும் 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இது சம்மந்தமான ஐந்து மொழிப் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாக பரவின. இந்தியில் இந்த படத்துக்கு ரா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

டிரைலர் அப்டேட்…


ரிலீஸ் தேதி நெருங்கிவருவதால் ரசிகர்கள் பீஸ்ட் படத்தின் டிரைலருக்காக ஆர்வமாக காத்திருந்தனர். அதைப் பூர்த்தி செய்யும் விதமாக பீஸ்ட் படத்தின் டிரெய்லர் வரும் ஏப்ரல் 2 ஆம் நாள் மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இணையத்தில் வைரலாக பரவ, ரசிகர்கள் ஏப்ரல் 2 ஆம் தேதிக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும், செல்வராகவன் சன் பிக்சர்ஸின் அறிவிப்பைப் பகிர்ந்து ‘வாவ்… வெயிட்டிங்’ எனக் கூற அந்த பதிவும் இப்போதும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Beast trailer update selvaraghavan viral post!

People looking for online information on Nelsondilipkumar, Selvaraghavan will find this news story useful.