வரிசையா 3 நாளும் செம ட்ரீட் WAITING- அடுத்தடுத்து வெளியாகும் பிரபல திரைப்பட பாடல்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மார்ச் 19, 20, 21 ஆகிய மூன்று தேதிகளில் அடுத்தடுத்து மூன்று முக்கிய படங்களின் அப்டேட்கள் வெளியாக உள்ளன.

Advertising
>
Advertising

விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஜாலியோ ஜிம்கானா, மகேஷ் பாபுவின் சர்காரு வாரிபட்டா படத்தின் செகண்ட் சிங்கிள் மற்றும் கேஜிஎப் 2 ஆம் பாகத்தின் டோபான் பாடல் ஆகியவை மார்ச் 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்த மூன்று நாட்களும் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டமாக அமையவுள்ளது.

செம்ம பார்ட்டி சாங் ஆன் தி வே…

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் பீஸ்ட் படத்துக்கான எதிர்பார்ப்பு எக்கச்சகமாக உருவாகியுள்ளது. இதையடுத்து படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக்குத்து பிப்ரவரி 14 அம் தேதி வெளியாகி இன்ஸ்டண்ட் ஹிட் ஆனது. அது மட்டுமில்லாமல் ரிலீஸ் ஆனது முதல் இப்போதுவரை இணையத்தில் அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. தற்போது வரை இந்த பாடலைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 150 மில்லியனைக் கடந்துள்ளது.

அரபிக்குத்துக்குப் பிறகு பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள செகண்ட் சிங்கிள் பாடலான ஜாலியோ ஜிம்கானா பாடலை  19.03.2022 அன்று வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அந்த பாடலின் முன்னோட்டத்தை சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டு இருந்தனர். அது ரசிகர்களை கவரவே அந்த பாடலுக்காக ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.


கேஜிஎப் TOOFAN

2018 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் உருவாகி இந்தியா முழுவதும் வெற்றியடைந்த படம் KGF. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கினார். யாஷ்,ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். திரையரங்குகளில் இந்திய மொழிகளில் ஹிட்டான கேஜிஎப், ஓடிடியில் வெளியான போது மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் வரவேற்பைப் பெற்று பட்டி தொட்டியெங்கும் கலக்கியது.. இந்த படத்தின் வெற்றியைத்தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
ஏப்ரல் 14 ஆம்  தேதி கேஜிஎப் 2 ரிலீஸ்க்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் இப்போது ஒரு சூப்பர் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வரும் மார்ச் 21 ஆம் தேதி படத்தில் இடம்பெற்றுள்ள TOOFAN என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்திய ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கேஜிஎப் 2 ரிலிஸ் நெருங்கியுள்ளதால் இனி அடுத்தடுத்து அப்டேட்களைப் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

மகேஷ் பாபுவின் செகண்ட் சிங்கிள்

மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சர்காரு வாரிபட்டா படத்தை பரசுராம் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் சங்கராந்திக்கு வெளியாவதாக இருந்த நிலையில் மே மாதம் 12 ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. இந்த படத்தின் போஸடர் மற்றும் டீசர் வெளியாகி ஏற்கனவே ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற முதல் சிங்கிள் பாடலும் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது. இதையடுத்து ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்டாக மார்ச் 20 ஆம் தேதி இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். தமன் மகேஷ் பாபு கூட்டணியில் ஏற்கனவே உருவான பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Beast Sarkaru Vaari Paata KGF2 movie songs releases next 3 days

People looking for online information on Beast, Kgf 2, Mahesh Babu, Vijay, Yash will find this news story useful.