பீஸ்ட் ரிலீஸ்.. உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலிஸாகும் என நேற்று தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

Advertising
>
Advertising

பீஸ்ட் பட்டாளம்…

நடிகர் விஜய், மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து நடிக்கும் பீஸ்ட் படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெட்டின்ஸ் கிங்ஸ்லே உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே இந்த படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது.

பட்டைய கிளப்பிய பாடல்கள்

இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன.  அதுபோல படத்தில் இருந்து இதுவரை வெளியாகியுள்ள இரண்டு பாடல்கள் வைரல் ஹிட் ஆகியுள்ளன. முதல் சிங்கிளான அரபிக்குத்து பாடல் கடந்த பிப்ரவரி 14 அம் தேதி வெளியாகி இன்ஸ்டண்ட் ஹிட் ஆனது. இதுவரை யுடியூபில் இந்த பாடலை 200 மில்லியன் பேருக்கு மேல் பார்த்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலர் இந்த பாடலுக்கு தங்கள் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் சில தினங்களுக்கு முன்னர் வெளியான ஜாலியோ ஜிம்கானா பாடலும் ரசிகர்களின் மனம்கவர்ந்த ஒன்றாக அமைந்துள்ளது. இந்த பாடலை விஜய் பாடியுள்ளார். 

சன் பிக்சர்ஸின் சர்ப்ரைஸ் அப்டேட்

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதிக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக நேற்று தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்  தங்கள் ட்விட்டர் பக்கத்தில்  ஏப்ரல் 13 ஆம் தேதி, பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்போடு கையில் துப்பாக்கியுடன் விஜய் இருக்கும் புதிய போஸ்டரையும் வெளியிட்டது. அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ்ப் புத்தாண்டுக்கு ஒருநாள் முன்னதாக புதன் கிழமை பீஸ்ட் திரைப்படம் வெளியாகிறது.

உதயநிதி ஸ்டாலினின் அடுத்த அப்டேட்

பீஸ்ட் பட ரிலீஸ் தேதி அறிவிப்பை முன்னிட்டு விஜய்யின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போது அடுத்த அப்டேட்டை தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். பீஸ்ட் படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை அவரின் ரெட்ஜெயிண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே விஜய்யை வைத்து குருவி என்ற படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Beast movie TN theatrical Rights bagged by udhayanidhi

People looking for online information on Beast, Nelson, Sun pictures, Vijay will find this news story useful.