பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடலான பீஸ்ட் மோட் பாடல் சற்றுமுன்னர் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்று வருகிறது.

”மனசுக்கும் உடம்புக்கும் நடுவுல நடக்கும் போராட்டம்”… கவனம் ஈர்த்த சிட்தி பட டிரைலர்…
எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பீஸ்ட்…
மாஸ்டர் வெற்றிக்குப் பிறகு விஜய்யும், டாக்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் நெல்சனும் பீஸ்ட் படத்தில் இணைந்துள்ளனர். இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. இந்த படத்தில் விஜய்யோடு பூஜா ஹெக்டே, யோகிபாபு, ரெட்டின்ஸ் கிங்ஸ்லே உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன், நடித்துள்ளார். ஏப்ரல் 13 ஆம் தேதி பேன் இந்தியா திரைப்படமாக 5 மொழிகளில் வெளியாகிறது. பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக்குத்தும் ஜாலியோ ஜிம்கானாவும்…
பீஸ்ட் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்து வருகின்றன. அதுபோல இதுவரை வெளியான அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. அரபிக்குத்து பாடல் யுடியூபில் 250 மில்லியன் பார்வைகளை தாண்டி சாதனைப் படைத்துள்ளது. படத்தை பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்கியதில் இரண்டு பாடல்களும் முக்கியக் காரணியாக அமைந்தன.
டிரைலரில் கவனத்தை ஈர்த்த தீம் இசை…
ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியான படத்தின் டிரைலர் டிரைலர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதையடுத்து பிற மொழிகளிலும் தற்போது டிரைலர் வெளியாகி வருகிறது. இந்த டிரைலரில் விஜய்யின் ஆக்ஷன் காட்சிகளும் அனிருத்தின் பின்னணி இசையும் ரசிகர்களால் வெகுவாக சிலாகிக்கப்பட்டன.
Meaner leaner stronger…
இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘பீஸ்ட் mode’ தீம் பாடல் வெளியாகியுள்ளது. டிரைலரிலேயே இந்த பாடலின் சில வரிகள் இடம்பெற்று ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தன. அதையடுத்து இப்போது வெளியாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வேகமாக பரவி வருகிறது.
“Poster-லயே.. Action இப்படி ஃபயர் ஆகுது”…. விஷால் படத்தின் premiere தேதியை அறிவித்த ஜி தமிழ்!