பீஸ்ட் படத்தின் தெலுங்கு உரிமத்தை இவர் தான் வாங்கிருக்காரா? அப்படி போடு... டபுள் ட்ரீட் தான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் பீஸ்ட்.

Beast Movie Telugu Rights Bagged by Dil Raju SVC
Advertising
>
Advertising

பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டர் நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாள்கிறார்.

Beast Movie Telugu Rights Bagged by Dil Raju SVC

தமிழ் புத்தாண்டு  தினத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த படத்தின் முன்னோட்டம் வெளியானது.

பீஸ்ட் படத்தின் ஒட்டு மொத்த கர்நாடக தியேட்டர் வெளியீட்டு உரிமையை தீரஜ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ் நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. பீஸ்ட் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையையும் ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

பீஸ்ட் படத்தின் சிங்கப்பூர், வளைகுடா நாடுகளின் வெளியீட்டு உரிமையை வலிமை பட வினியோகஸ்தரான Home Screen பொழுதுபோக்கு நிறுவனம் கைப்பற்றி உள்ளது. பீஸ்ட் படத்தின் கேரள உரிமையை மாரி பட தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபனின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் தெலுங்கு (ஆந்திரா - தெலுங்கு)  உரிமையை  விஜய்யின் 66 படத்தை தயாரிக்கும் தில்ராஜூ கைப்பற்றி உள்ளார்.

மேலும் ஏப்ரல் 5 மாலை 6 மணிக்கு தெலுங்கு டிரெய்லர் வெளியாக உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Beast Movie Telugu Rights Bagged by Dil Raju SVC

People looking for online information on பீஸ்ட், Beast, Telugu Beast, Vijay will find this news story useful.