பீஸ்ட் படம் பிரபல ஓடிடியில் வெளியாக உள்ளது.

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உலகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 13 அன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, பிற ரோல்களில் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தது.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டர் நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாண்டார். கிரண் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். பீஸ்ட் படம் ரசிகர்களிடம் கனிசமான வரவேற்பையும், கலவையான விமர்சனங்களையும் பெற்றது.
பீஸ்ட் படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டுள்ளது. பீஸ்ட் திரைப்படம் விஜய் படங்களில் குறிப்பாக தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான திரைகளில் வெளியாகியது.
இச்சூழலில் பீஸ்ட் படம் பிரபல சன் நெக்ஸ்ட் தளத்திலும் நெட்பிளிக்ஸ் தளத்திலும் வரும் மே மாதம் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட OTT தளங்கள் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.
https://www.behindwoods.com/bgm8/