பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டர் பட ரிலீஸை முன்னிட்டு வெளியாகி உள்ளது.

தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்'.. செல்வராகவன் பகிர்ந்த சூப்பர் BTS போட்டோ!
தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் பீஸ்ட்.
பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டர் நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாள்கிறார்.
தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந்த படத்தின் முன்னோட்டம் வெளியானது.
பீஸ்ட் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையையும் ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
தமிழக உரிமையை ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் படம் ரிலீசாக ஒரு வாரமே உள்ள நிலையில் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
படத்தின் டிக்கெட் முன்பதிவும் துவங்கி உள்ளது. இதனை முன்னிட்டு இந்த புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. இரு சக்கர வாகனத்தில் எல்லை பாதுகாப்பு பகுதியில் விஜய் வாகனத்தில் செல்வது போல லுக் அமைந்துள்ளது.
ஏற்கனவே வெளிவந்த போஸ்டரின் முதல் லேயர் இந்த போஸ்டரில் மையமாக அமைந்துள்ளது.
"பல தடவ சொல்லிட்டோம்.. இதுக்கு அப்புறமும்.." ரசிகர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் எச்சரிக்கை