”சிலிர்க்க வைக்கும் சவுண்ட் எபெக்ட்ஸ்”… பீஸ்ட் படத்தின் லேட்டஸ்ட் தெறி GLIMPSE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் திரைப்படத்தின் புதிய ப்ரோமோஷன் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.

Advertising
>
Advertising

"பீஸ்ட்"-ம் நமக்கு தான்.. 'காத்துவாக்குல ரெண்டு காதலும்" நமக்கு தான்.. வேற லெவல் வினியோகஸ்தர்

இன்னும் ஒரு நாள்…

விஜய்யின் 65 ஆவது படமான பீஸ்ட் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த ஆண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இந்த படம் அமைந்துள்ளது. பீஸ்ட் திரைப்படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார். 

படத்தில் விஜய் வீரராகவன் என்ற உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவரோடு பூஜா ஹெக்டே ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, ரெட்டின்ஸ் கிங்ஸ்லே, அபர்ணா தாஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.  இவர்களோடு முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ளார். அவர் நடிப்பில் முதலில் வெளியாகும் படமாக பீஸ்ட் அமைந்துள்ளது. பேன் இந்தியா திரைப்படமாக 5 மொழிகளில் வெளியாகிறது. நெல்சனின் முந்தைய படங்களை விட இந்த படத்தில் ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.

கவனத்தை ஈர்க்கும் ப்ரமோஷன்கள்…

நாளை படம் ரிலீஸாக உள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. போஸ்டரில் விஜய் துப்பாக்கியோடு ஸ்டைலாக இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டரோடு ”வீரராகவனின் மிஷனுக்கு தயாராகுங்கள். நாளையில் இருந்து” எனக் குறிப்பிடப் பட்டு இருந்தது. பீஸ்ட் படம் தொடங்கியதில் இருந்தே வெளியாகும் போஸ்டர்கள் அனைத்தும் ரசிகர்களைக் கவர்ந்துவருகின்றன. ஏற்கனவே பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை சிறப்பான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளன.

Sound effects-ல் புதிய ப்ரோமோ…

இந்நிலையில் தற்போது பீஸ்ட படத்தின் மிரட்டலான வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ள இந்த ப்ரோமோவில் பின்னணி இசை எதுவும் இல்லாமல் சவுண்ட் எபெக்ட்ஸ் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுவே ஒரு மிரட்டலான அனுபவத்தைக் கொடுக்கும் விதமாக உள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வாவ்.. சதீஷ் - பவித்ரா நடித்த ‘நாய் சேகர்’…. பிரபல டிவி சேனலில் .. எதுல? எப்போ?

தொடர்புடைய இணைப்புகள்

Beast movie new glimpse video with super sound effects

People looking for online information on Anirudh, Beast Movie, Beast movie new glimpse video, Nelson Dilipkumar, Vijay will find this news story useful.