நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் செந்தில் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடன் பணியாற்றும் உதவி இயக்குனர்களின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். கோலமாவு கோகிலா படம் வெளிவந்து இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவடைகின்றன. அதனை முன்னிட்டு பீஸ்ட் படப்பிடிப்பில் உதவி இயக்குனர்களுடன் நெல்சன் திலிப்குமார் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த உதவி இயக்குனர்கள் நெல்சன் திலிப்குமாருடன் கடந்த நான்கு வருடமாக உதவி இயக்குனராகப் பணி புரிகின்றனர். இதனைக் குறிப்பிட்டு கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களை மென்ஷன் செய்து நெல்சன் திலீப்குமார் கீழ்கண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.