பீஸ்ட் படத்தின் ஆஸ்திரேலியா நியூசிலாந்து உரிமத்தை பிரபலமான நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
வலிமை படத்தை தொடர்ந்து பீஸ்ட் படத்தின் உரிமத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!
தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டர் நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாள்கிறார்.
தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகிறது.
பீஸ்ட் படத்தின் ஒட்டு மொத்த கர்நாடக தியேட்டர் வெளியீட்டு உரிமையை தீரஜ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ் நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. பீஸ்ட் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையையும் ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிறுவனம் அஜித் நடித்த பில்லா, ஏகன் படங்களையும், விஜய் நடித்த வில்லு படத்தையும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பீஸ்ட் படத்தின் சிங்கப்பூர், வளைகுடா நாடுகளின் வெளியீட்டு உரிமையை வலிமை பட வினியோகஸ்தரான Home Screen பொழுதுபோக்கு நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
பீஸ்ட் படத்தின் கேரள உரிமையை மாரி பட தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபனின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இவர் ஏற்கனவே விஜய்யின் பிகில், மாஸ்டர் படங்களை கேரளாவில் வினியோகித்தவர் ஆவார்.
இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ஆஸ்திரேலியா நியூசிலாந்து உரிமத்தை RRR, புஷ்பா, பீஷ்ம பர்வம் படங்களின் வினியோகஸ்தர் MKS Talkies நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நாடுகளில் டிக்கெட் முன்பதிவும் துவங்கி உள்ளது.
சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த நயன்தாரா... ஓபன் பண்ணி பாத்துட்டு சமந்தா சொன்ன விஷயம்!