BEAST படத்தின் அடுத்த SONG.. MEANER, LEANER, STRONGER ரிலீஸ் எப்போ? சன் பிக்சர்ஸ் கொடுத்த வேறலெவல் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் நெல்சன் திலிப்குமார் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

Beast Movie 3rd Single Meaner Leaner Stronger Song Update
Advertising
>
Advertising

மூன்று முன்னணி நடிகைகளுடன் Vijay Antony நடிக்கும் புதிய படம்.. படக்குழு வெளியிட்ட தரமான அப்டேட்!

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

Beast Movie 3rd Single Meaner Leaner Stronger Song Update

தமிழ் புத்தாண்டு  தினத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந்த படத்தின் முன்னோட்டம் வெளியானது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, டெல்லி, சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்த சிங்கிள் பாடலான Meaner, leaner, stronger 💪🏻 Can you feel the power, terror, fire 🔥 பாடல் நாளை வெளியாவதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதை இசையமைப்பாளர் அனிருத்தும் அறிவித்துள்ளார். இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதி உள்ளார்.

இன்று மாலை 4 மணிக்கு மலையாளத்தில் பீஸ்ட் டிரெய்லர்  ரிலீசாக உள்ளது. பீஸ்ட் படத்தின் டிக்கெட் முன்பதிவும் துவங்கி உள்ளது. தமிழக உரிமையை ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

 

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் புதிய படம்.. மியூசிக் உரிமத்தை வாங்கிய பிரபல நிறுவனம்!

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Beast Movie 3rd Single Meaner Leaner Stronger Song Update

People looking for online information on Anirudh, Beast, Beast Movie 3rd Single, Meaner Leaner Stronger Song updates, Nelson Dilipkumar, Vijay will find this news story useful.