பீஸ்ட் ட்ரீட் விஜய் ரசிகர்களுக்கு எப்போது.. நெல்சன் திலீப் குமார் மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : "பீஸ்ட்"திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று மூன்றாவது லுக் போஸ்டருடன் அப்டேட் வெளியிட்டுள்ளார் படத்தின் இயக்குனர் நெல்சன் திலிப் குமார்.

Advertising
>
Advertising

 


மிகுந்த எதிர்பார்ப்பு

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், விஜய் நடிக்கும் படம் தான் பீஸ்ட். இப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே நடிக்கிறார். கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்த, இயக்குனர் நெல்சன் திலிப் குமார் தற்போது இந்த படத்தில் பிஸியாக இருக்கிறார். இப்படம் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக  உருவாகி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிய நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புகள் டெல்லி மற்றும் சென்னையில் நடந்தது.

பிளாக் பஸ்டர்

தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல படங்கள் நடித்து வரும் பூஜா ஹெக்டே, தமிழில் முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு விஜயுடன் நடிப்பதால் இவருக்கு  எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படம் மிகப் பெரிய ஹிட்டானதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு கூடிவருகிறது. மேலும் இது நெல்சன் திலீப்குமாருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என்று அவரது ரசிகர்களால் பெருமளவு எதிர்பார்க்கப்படுகிறது.


மோதல் இருக்குமா?

இப்படத்தின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளத்தில் வெளியாகி வந்தநிலையில், இன்று 6 மணிக்கு இப்படத்திற்கான அடுத்த அப்டேட்டை வெளியிட்டு உள்ளார் இயக்குனர் நெல்சன். பீஸ்ட் படத்தின் 3rd லுக் போஸ்டருடன் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று மாஸ் அப்டேட் கொடுத்து  ரசிகர்களுக்கு சந்தோசமான செய்தியை கூறியுள்ளார். ஏப்ரல் மாதம் என்பதால் சித்திரை திருநாள் அன்று படம் வெளிவருமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் KGF Chapter 2 படமும் அதே தேதியில் வெளிவருவதால், இந்த இரண்டு படத்திற்கும் போட்டி இருக்குமா என்ற பல கோணத்தில் ரசிகர்கள் சிந்திக்க தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Beast movie 3rd look poster revealed by Nelson Dilipkumar

People looking for online information on Beast, Beast3rdLook, BeastVijay, PoojaHegde will find this news story useful.