தென்காசி: பீஸ்ட் படம் ஏப்ரல் 13 முதல் 17 வரை 24 மணி நேரமும் திரையிடப்படுகிறது.

புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம்.. அல்லு அர்ஜூன் பிறந்தநாளில் வெளியான சூப்பர் அப்டேட்
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டர் நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாள்கிறார்.
இசையமைப்பாளர் அனிருத் இசையில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து YouTube-லும் Instagram Reels-லும் பல சாதனைகளை படைத்து வருகிறது, மற்றும் சில தினங்களுக்கு முன் (19.03.2022) அன்று வெளிவந்த, கு.கார்த்திக் வரிகளில் தளபதி விஜய் பாடிய ஜாலியோ ஜிம்கானா பாடல் ரிலீஸாகி மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. பாடல்களும் அதற்கான புரோமோவும் படத்திற்கு மிகப்பெரிய ஹைப் ஏற்படுத்தி உள்ளதால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது.
தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பீஸ்ட் படம் ஏப்ரல் 13 முதல் 17 வரை 24 மணி நேரமும் திரையிடப்படுகிறது. ஆலங்குளம் டி பி வி மல்டிபிளக்ஸில் உள்ள இரண்டு திரைகளிலும் ஏப்ரல் 13 காலை 4 மணி முதல் ஏப்ரல் 18 அதிகாலை வரை திரையிடப்படுகிறது.
இதனை தியேட்டர் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அசோக் செல்வன் நடித்த புதிய திரைப்படம்.. பிரபல TV சேனலில் ஒளிபரப்பு! எப்போ? எதுல?