விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள 'பீஸ்ட்' திரைப்படம் குறித்து அசத்தல் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

BREAKING: 'BEAST' படத்தின் மிக முக்கிய உரிமையை கைப்பற்றிய இந்தியாவின் முன்னணி நிறுவனம்!
கடந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில், அதிக வரவேற்பை பெற்று, பிளாக்பஸ்டர் ஆன திரைப்படம் விஜய்யின் 'மாஸ்டர்'. அதே போல, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டாக்டர்' திரைப்படமும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.
டாக்டர் படத்தினை இயக்கிய நெல்சன் திலீப் குமார், அடுத்ததாக விஜய்யை வைத்து 'பீஸ்ட்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு, ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில், ஏப்ரல் மாதம் படம் திரைக்கு வரும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
லேட்டஸ்ட் அப்டேட்
படத்தின் ரிலீஸ் குறித்த தகவலுக்கு பிறகு, பீஸ்ட் படத்தை குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளி வராமலே இருந்தது. ஆனால், இதற்கு மத்தியில், படத்தின் ஓப்பனிங் பாடலை, சிவகார்த்திகேயன் எழுதியுள்ளதாகவும், விஜய் பாடியுள்ளதாகவும் தகவல்கள் அதிகம் வெளியாகி, இணையத்தில் வலம் வர தொடங்கின.
பீஸ்ட் சிங்கிள்
இந்நிலையில், தற்போது மேலும் ஒரு அசத்தல் தகவல் வெளியாகி, சினிமா ரசிகர்கள் மத்தியில், அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பீஸ்ட் படத்தின் ஓப்பனிங் பாடலுக்கான மேக்கிங் ஷூட், சமீபத்தில் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது மட்டுமில்லாமல், இதில், விஐய், சிவா கார்த்திகேயன், அனிருத், நெல்சன் திலீப்குமார் ஆகியோர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
விஜய் ரசிகர்கள் உற்சாகம்
இதில், மொபைல் போன் வாயிலாக தான் விஜய் பங்கு கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல், விஜய் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது. நெல்சன் - சிவகார்த்திகேயன் - அனிருத் காம்போ, இதற்கு முன்பாக இணைந்த டாக்டர் திரைப்படம், மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.
வெற்றிமாறனை தொடர்ந்து ராம் படத்தில் சூரி! வெளிவந்த ஷூட்டிங் ஸ்பாட் BTS புகைப்படம்
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
அதே போல, டாக்டர் படத்தின் பாடலுக்கான லிரிக் வீடியோக்களின் ஆரம்பத்தில், மூவரும் இணைந்து அடிக்கும் லூட்டியும் மிகப் பெரிய அளவில் வைரலாகியிருந்தது. தற்போது, விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பீஸ்ட்' திரைப்படத்திலும், அப்படி ஒரு காம்போ உருவாகியுள்ளதால், முதல் பாடல் எப்போது வெளிவரும் என்பதை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.