இயக்குனர் நெல்சன் திலிப்குமார் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
சன்னி லியோன் பேயாக நடிக்கும் Oh My Ghost… விஜய் சேதுபதி & வெங்கட் பிரபு வெளியிடும் First look
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
பீஸ்ட் சண்டைக்காட்சி படப்பிடிப்புக்கு டில்டா ரிக்கை பயன்படுத்துவதாகவும், ரெட் நிறுவன கொமோடோ கேமராக்களுக்கு இந்த ரிக் சிறப்பாக இருப்பதாகவும்,பீஸ்ட் படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு ரெட் நிறுவனத்தின் புதிய வரவான RED RAPTOR வகை கேமராவை இந்தியாவிலேயே முதல் முறையாக பயன்படுத்துவதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா கூறியுள்ளார்.
இந்த ரெட் ராப்டர் வகை கேமராவின் சிறப்பம்சமாக Slow Motion வீடியோக்களை துல்லியமாக 8K Resolution கொண்டு எடுக்கலாம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, டெல்லி, சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள், டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பீஸ்ட் படத்தின் அமெரிக்க தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை வலிமை படத்தின் அமெரிக்க வினியோகஸ்தரான ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் & அஹிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளனர்.
இந்நிலையில் பீஸ்ட் படத்தின் டிக்கெட் முன்பதிவும் உலகம் முழுவதும் துவங்கி உள்ளது. அமெரிக்காவில் ஒரு நாள் முன்பு ஏப்ரல் 12 மாலை 3.30 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுகிறது. (அதாவது இந்திய நேரப்படி ஏப்ரல் 13 அதிகாலை 5 மணி அளவில்) இதற்கான டிக்கெட் விலையாக 20 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் 1510 ரூபாய் ஆகும்.