"ரஜினி சார் படம் இப்படி தான் அமஞ்சது.." - இயக்குனர் நெல்சன் சொன்ன EXCLUSIVE அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

Advertising
>
Advertising

ராம் - நிவின் பாலி இணையும் புதிய படம்.. BTS போட்டோவோடு வெளியான ஜோரான ஷூட்டிங் அப்டேட்!

பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டது. 

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, பிற ரோல்களில் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

பீஸ்ட் படம் வெளியாவதற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன், அனிருத், சிவகார்த்திகேயன், வரலெட்சுமி சரத்குமார், சரத்குமார், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை டிவிட்டரில் தெரிவித்தனர்.

இந்நிலையில் இயக்குனர் நெல்சன் தான் அடுத்து இயக்க இருக்கும் ரஜினிகாந்த் படம் குறித்து நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான தகவலை பகிர்ந்து உள்ளார். அதில், ரஜினிகாந்திடம் படத்தின் கருவை சொன்னதாகவும், கரு மனதில் தோன்றியதும் இந்த சூழ்நிலையில் ரஜினிக்கு இந்த கதை பொருத்தமான ஒன்றாக இருக்கும் என்று தோன்றியதாகவும், ரஜினிக்கும் கதை பிடித்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த திரைப்படத்துக்கு தற்காலிகமாக #Thalaivar169 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் அனிருத் இசை அமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் இந்த படம் உருவாகிறது.

VIDEO: KGF Chapter 2.. தீரா தீரா சுல்தானா..! தெறி மாஸான அடுத்த சிங்கிள் எப்படி இருக்கு?

"ரஜினி சார் படம் இப்படி தான் அமஞ்சது.." - இயக்குனர் நெல்சன் சொன்ன EXCLUSIVE அப்டேட்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Beast Director Nelson Dhilipkumar about Rajinikanth next movie

People looking for online information on Anirudh, Beast, Nelson Dilipkumar, Pooja Hegde, Rajinikanth, Vijay will find this news story useful.