BREAKING: BEAST பட அரபிக்குத்து பாட்டில் அனிருத்துடன் இணைந்த பிரபல பாடகி இவங்களா? வேற லெவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: பீஸ்ட் படத்தில் குறிப்பாக அரபிக்குத்து பாடலின் புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

Advertising
>
Advertising

KRK TEASER: நயன்தாராவா? சமந்தாவா? காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் எப்போ?

இயக்குனர் நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு முன்னர் அறிவித்தனர்.  பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் நாள் அன்று வெளியாக உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் "அரபி குத்து" வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் நாள் காதலர் தினத்தை ஒட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் அரபி மொழியில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார்.  இது பற்றிய அறிவிப்பில் டாக்டர் படம் செல்லம்மா பாடல் ப்ரோமோ போல இந்த பாட்டிற்கும் வீடியோ வெளியிட்டுள்ளனர்.  இந்த ப்ரோமோ வீடியோவில் சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சன் ஆகியோருடன் விஜய்யின் குரலும் இடம்பெற்றது.

இந்நிலையில் இந்த முழு பாடலயும் சிவகார்த்திகேயன் எழுத, அனிருத் இசையமைத்து பாடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அனிருத்துடன் செல்லம்மா பாடலை பாடிய ஜோனிதா காந்தியும் பாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான மேக்கிங் வீடியோ தயாராகி விட்டதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீபிகா படுகோனுக்கு KISS கொடுத்து பாராட்டிய ரன்வீர் சிங்! வைரலாகும் ரொமாண்டிக் புகைப்படம்

தொடர்புடைய இணைப்புகள்

Beast Anirudh Jonita Gandhi has sung Arabic Kuthu song

People looking for online information on Anirudh, Arabic Kuthu song, அரபிக்குத்து பாடல், இயக்குனர் நெல்சன் திலிப்குமர், பீஸ்ட், பூஜா ஹெக்டே, விஜய், Beast, Jonita Gandhi, Nelson, Vijay will find this news story useful.