பீஸ்ட் 100வது நாள் ஷூட்.. ‘விஜய், பூஜா ஹெக்டே & நெல்சன்’ அடங்கிய வெறித்தனமான ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.

Advertising
>
Advertising

இவரது இயக்கத்தில, தளபது விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னை முதல் ஜார்ஜியா வரை பல்வேறு கட்டங்களாக நடக்கிறது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இது நூறாவது நாள் ஷூட்டிங். இந்த அருமையானவர்களுடனான கலகலப்பான 100 நாட்கள்!” என பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் தளபதி விஜய் டிரம்ஸ் முன் அமர்ந்திருக்க, அவரது பின்னால் நின்று பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே மைக்கில் பாடுவது போல் மாஸாக போஸ் கொடுக்கிறார்.

இவர்களுக்கு அருகில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் நிற்க, அருகில் நடிகர் கிங்க்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரை காண முடிகிறது. தளபதி விஜய்யின் 65வது படமான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அடுத்த வருடம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்படத்தின் பாடல்கள், டிரைலர் உள்ளிட்டவற்றை காண ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Beast 100th day vijay pooja hegde nelson trending viral photo

People looking for online information on Nelson Dilipkumar, Pooja Hegde, Vijay will find this news story useful.