முகத்துக்கு நேரா முதல் OPEN நாமினேஷன்! அத்தனை பேரும் சொன்ன அந்த 2 பேர்! BB ULTIMATE TAMIL

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Bigg Boss Ultimate Tamil: டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் எபிசோடு விஜய் டிவியிலும் நேரடியாக ஒளிபரப்பானது.

BB Ultimate Tamil first Open nomination 2 major contestant
Advertising
>
Advertising

போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியி  5வது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிறகு அறிமுகப்படுத்தப்பட்டது இதில் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய், தாமரை உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

BB Ultimate Tamil first Open nomination 2 major contestant

செலிபிரிட்டி பிரஸ் மீட்

கடந்த வாரங்களில் செலிபிரிட்டி பிரஸ் மீட் டாஸ்க், காபி பொடி பிரச்சனை உள்ளிட்டவை மற்றும் கன்ஃபெஷன் ரூம் நாமினேஷன் உள்ளிட்டவை பிக்பாஸ் வீட்டில் அரங்கேறியிருந்தன. இதேபோல், போட்டியாளர்களின் ஓட்டுகளுக்கு ஏற்ப மகா நடிகை, விஷ பாட்டி, நாட்டாமை என பல பட்டங்களும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டன. இதனை அனிதா சம்பத் தொகுத்து வழங்கினார். 

Open நாமினேஷன்

இந்நிலையில் போட்டியாளர்கள் முதல் Open நாமினேஷனில் கலந்துகொண்டனர். சக போட்டியாளர் பெயரை குறிப்பிட்டு அவர்கள் மீதான தங்கள் நாமினேஷன் முடிவுக்கான காரணத்தை விளக்கி சொல்ல வேண்டும், பின்னர் அவர்கள் முகத்தில் சென்று மார்க் குறியை போட வேண்டும். அப்படித்தான் பாலரும் சுஜாவையும் ஜூலியையும் நாமினேட் செய்துள்ளனர்.

முகத்துக்கு நேரே..

Open நாமினேஷனை பொருத்தவரை போட்டியாளர்களுக்கிடையே நேரடியாக முரண்கள் எழுவதற்கு இதன் மூலம் வாய்ப்பு உருவாகிறது, அதையும் மீறி ஒருவரை ஒருவர் நாமினேட் செய்ய வேண்டுமென்றால் அதற்கு ஒவ்வொரு போட்டியாளரும் நன்றாக யோசித்தாக வேண்டும். அப்படியானால் தான் முகத்துக்கு நேரே ஒருவரை பற்றி சொல்லி நாமினேட் செய்ய முடியும்.

அனைவரும் சொன்ன 2 பேர்..

அந்த வகையில் ஆகியோர் தாமரை, அபிராமி, ஷாரிக் ஹாசன் உள்ளிட்டோர் சுஜாவை நாமினேட் செய்தனர். இதில் ஷாரிக் ஹாசன், சுஜாவை இந்த பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் எக்ஸ்ட்ராவாக இருப்பதாக தோன்றுவதாக குறிப்பிட்டு நாமினேட் செய்தார்.

இதேபோல், பாலா, நிரூப், பாலாஜி, வனிதா ஆகியோர் ஜூலியை நாமினேட் செய்தனர். அப்போது வனிதா,  “ஜூலி ரொம்ப ரொம்ப Safe Game ஆடுறா” என்று குறிப்பிட்டார். அனைவருமே நாமினேட் செய்தவர்கள் முகத்தில் மார்க் குறியீட்டை போட்டனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்பை போல் அல்லாமல் இந்த ஓடிடி நிகழ்ச்சி, எந்தவித சென்சார் கட் மற்றும் பெரிய அளவிலான காட்சிகள் கட் பண்ணப்படுவது உள்ளிட்ட விஷயங்கள் இல்லாமல் நடக்கிறது. பெரும்பாலும் ஒரு நாள் முழுவதும் நடக்கக் கூடிய விஷயங்களை 24 மணி நேரமும் நேரலையில் காட்டப்பட்டு வருகிறது. அதே போல் இந்த நிகழ்ச்சியின் 24 மணிநேரமும் நேரலை காட்சி ஓடிக் கொண்டிருப்பது போல, மொத்த நிகழ்ச்சியும் ஒரு மணி நேரமாக இரவு 9 மணிக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தினமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "ஹார்டின் போடலனு இப்படி பண்றாங்க"... தேம்பி அழும் ஜூலி.. என்னப்பா நடக்குது பிக்பாஸ் வீட்ல..

தொடர்புடைய இணைப்புகள்

BB Ultimate Tamil first Open nomination 2 major contestant

People looking for online information on BBUltimateTamil, Bigg Boss Tamil, Bigg Boss Ulitmate Tamil, Contestants, DisneyHotstar, Julie, Suja varuni will find this news story useful.