"இந்த தப்ப தயவு செஞ்சு பண்ணாதீங்க.." பாலா - நிரூப் மோதல்.. ஃபேன்ஸ்க்கு சிம்பு போட்ட அன்பு கட்டளை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்பு தற்போது தொகுத்து வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

BB ultimate simbu requests fans to sharing videos
Advertising
>
Advertising

"உங்கள பாக்கணும்ன்னு வந்தா.." 'ஜெய்பீம்' சிறுமி வெளியிட்ட வீடியோ.. கண்ணு எல்லாம் கலங்கிருச்சு

கடந்த வார இறுதியில் நடிகர் சிம்பு வந்து, போட்டியாளர்களுக்கு மத்தியில் பேசி இருந்த காட்சிகள் அதிகம் வைரல் ஆகி இருந்த்தது.

இதற்கு காரணம் என்னவென்றால், கடந்த வாரத்தில் டாஸ்க்கின் பெயரில், ஏராளமான பரபரப்பு மற்றும் சர்ச்சை சம்பவங்கள், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மத்தியில் நடந்திருந்தது தான்.

விசாரித்த சிம்பு

தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் என்ட்ரி கொடுத்த சிம்பு, "கோழி மாதிரி விளையாட சொன்னா, சேவலா மாறி அடிச்சுக்குறாங்க, கடிச்சுக்குறாங்க, வாங்க விசாரிப்போம்" என கூறிக் கொண்டே போட்டியாளர் பக்கம் திரும்பினார். சென்ற வாரத்தில், நடந்து முடிந்த டாஸ்க் குறித்து, சிம்பு போட்டியாளர்களிடம் விசாரிக்க, வெயில், பசி, மயக்கம் என தாங்கள் ஒவ்வொருவரும் பட்ட கஷ்டத்தை போட்டியாளர்கள் விளக்கினார்கள்.

ரொமப் அனுபவம் கெடச்சுருச்சு

அதே போல, KPY சதீஷ் பிக்பாஸ் வீட்டில் அதிக அனுபவம் அடைந்துள்ளது பற்றியும், நடிகர் சிம்பு பேசியிருந்தார். தொடர்ந்து, பாலா - நிரூப் இடையே நடந்த சண்டை பற்றி பேசிய சிம்பு, இறுதியில் மக்கள் மத்தியிலும் வைத்திருந்த கோரிக்கை தான், தற்போது மிகப் பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் அடிதடி

பாலா மற்றும் நிரூப் ஆகியோர், முட்டை டாஸ்க்கின் போது மாறி மாறி அடிதடியில் ஈடுபடும் அளவுக்கு சென்றிருந்தார்கள். பாலாவை நோக்கி கை ஒங்கச் சென்றிருந்த நிரூப்பை மற்ற போட்டியாளர்கள் வந்து தடுத்தனர். பதிலுக்கு பாலாவும் எகிற, பிக்பாஸ் வீடே அப்போது இரண்டாகி இருந்தது.

இது பற்றி பேசிய சிம்பு, "தெரிஞ்சு பட்டுச்சோ. தெரியாம பட்டுச்சோ, ஒரு ஸாரி சொல்லியிருக்கலாமே?" என பாலாவிடம் கேட்டார். "நிரூப் பேசிய வார்த்தைகள் காரணமாக மன்னிப்பு கேட்க தோணவில்லை" என்றும் பாலா விளக்கம் அளித்தார்.

ரசிகர்களுக்கு வேண்டுகோள்

பாலாவை போல, நிரூப்பும் தன் பக்கமுள்ள நியாயம் என்ன என்பது பற்றி, சிம்புவிடம் விளக்கம் அளித்திருந்தார். இது பற்றி பேசி முடித்திருந்த சிம்பு, பிக்பாஸ் ரசிகர்களை நோக்கி ஒரு வேண்டுகோளையும் வைத்திருந்தார். பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் தெரியாமல் செய்யும் தவறுகளை நூறு தடவைக்கு மேல் ஷேர் செய்து விட வேண்டாம் என சிம்பு கோரிக்கை வைத்துள்ளார்.

அது மட்டுமில்லாமல், நேற்றைய எபிசோடில் அனிதா வெளியேறியிருந்தது, ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

BB Ultimate: கண்ணீருடன் வெளியேறிய அனிதா.. "உன் Fans-தான் எல்லாத்துக்கும் காரணம்.." யார சொல்றாங்க?

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

BB ultimate simbu requests fans to sharing videos

People looking for online information on BB Ultimate, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate, SilambarasanTR, Vijay Television will find this news story useful.