"ஸாரி சொல்லியிருக்கலாமே?".. பாலாவிடமே கேட்டுவிட்ட சிம்பு.. இந்த வார பரபரப்பு BBULTIMATE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்பு தொகுத்து வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, டிஸ்னி ஹட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

Advertising
>
Advertising

கையில் துப்பாக்கியுடன் 'விஜய்'.. புதிய போஸ்டருடன் வெளியான 'பீஸ்ட்' படத்தின் ரிலீஸ் 'Date'..

இந்த வார இறுதியில் நடிகர் சிம்பு வந்திருந்த நிலையில், இதுவரை இல்லாமல் இந்த முறை சிம்பு பேசியிருந்த விஷயங்கள், அதிக கவனத்தை ஈர்த்திருந்தது. இதற்கு மிக முக்கிய காரணம், கடந்த வாரத்தில் நடந்த ஏராளாமான பரபரப்பு மற்றும் சர்ச்சை சம்பவங்கள் தான்.

சிம்புவின் என்ட்ரி

"கோழி மாதிரி விளையாட சொன்னா, சேவலா மாறி அடிச்சுக்குறாங்க, கடிச்சுக்குறாங்க, வாங்க விசாரிப்போம்" என கூறிக் கொண்டே என்ட்ரி கொடுத்தார் சிம்பு. நடந்து முடிந்த டாஸ்க் குறித்து, சிம்பு போட்டியாளர்களிடம் விசாரிக்க, வெயில், பசி, மயக்கம் என தாங்கள் ஒவ்வொருவரும் பட்ட கஷ்டத்தை போட்டியாளர்கள் விளக்கினார்கள்.

பாலா - நிரூப் மோதல்

மேலும், வைல்டு கார்ட் என்ட்ரியில் வந்த சதீஷ் முந்தைய வாரத்தை விட, அதிக அனுபவம் அடைந்தது பற்றியும் சிம்பு பேசியிருந்தார். அதே போல, தாமரையிடம் தம்பியாக மாறிய சிம்பு, அதன் அன்புக்காக அதிகம் ஏங்கி இருந்ததும், ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தது. தொடர்ந்து, பாலா - நிரூப் மோதல் பற்றி சிம்பு போட்டு உடைத்து தான் ஹைலைட்.

மன்னிப்பு கேட்டிருக்கலாம்

பாலா மற்றும் நிரூப் ஆகியோர், முட்டை டாஸ்க்கின் போது மாறி மாறி அடிதடியில் ஈடுபடும் அளவுக்கு சென்றிருந்தார்கள். இது பற்றி பேசிய சிம்பு, "தெரிஞ்சு பட்டுச்சோ. தெரியாம பட்டுச்சோ, ஒரு ஸாரி சொல்லியிருக்கலாமே?" என பாலாவிடம் கேட்டார். "நிரூப் பேசிய வார்த்தைகள் காரணமாக மன்னிப்பு கேட்க தோணவில்லை" என்றும் பாலா விளக்கம் அளித்தார்.

ரசிகர்களுக்கு சிம்பு வைத்த கோரிக்கை

தொடர்ந்து, நிரூப்பும் தனது தரப்பிலான நியாயத்தை தெரிவித்திருந்தார். இதனிடையே, பிக்பாஸ் போட்டியாளர்கள் தெரியாமல் செய்யும் தவறை நூறு தடவைக்கு மேல் ஷேர் செய்து விட வேண்டாம் என ரசிகர்களுக்கும் கோரிக்கை ஒன்றை சிம்பு வைத்திருந்தார்.

மாலத்தீவு, கோவா போகாம, இந்த வயசுல காசியா? சீரியல் நடிகையின் திடீர் பயணம்.. ரசிகர்கள் ஆச்சரியம்

தொடர்புடைய இணைப்புகள்

Bb ultimate simbu about balaji and niroop fight also request fans

People looking for online information on BB Ultimate, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate, SilambarasanTR will find this news story useful.