விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன்களுக்கு கிடைத்த வரவேற்பினை போலவே, ஹாட்ஸ்டார் தளத்தில், 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
கேரள அரசு கவுரவிக்க போகும் பிரபல தமிழ் இசையமைப்பாளர்.. வெளிவந்த செம்ம அறிவிப்பு..!
24 மணி நேரமும் ரசிகர்கள், இந்த நிகழ்ச்சியை கவனிக்க முடியும் என்பதால், சர்ச்சைகள் மற்றும் பரபரப்பு காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியை நடிகர் சிலம்பரசன் தற்போது தொகுத்து வழங்கி வருகிறார்.
வைல்டு கார்டு என்ட்ரி
மொத்தம் 15 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் களமிறங்கினர். இதில், வனிதா மன உளைச்சல் காரணமாக, பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற, எலிமினேட் செய்யப்பட்ட சுரேஷ் சக்கரவர்த்தியும், வைல்டு கார்டு என்ட்ரியில் வந்தார். அதன் பிறகு, விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு போட்டியாளர் சதீஷ் என்ட்ரி கொடுத்தார்.
ரம்யா பாண்டியன்
இதற்கு அடுத்தபடியாக, பிக்பாஸ் நான்காம் சீசனில் பங்கேற்ற நடிகை ரம்யா பாண்டியன், சர்ப்ரைஸ் என்ட்ரியாக உள்ளே வந்தார். அவரை பார்த்ததும், பிக்பாஸ் ஹவுஸ்மேட்கள் மகிழ்ச்சியில் திளைத்து போய், அவரைக் கட்டித் தழுவி வரவேற்றனர்.
தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ரம்யா பாண்டியனிடம் தாமரை மற்றும் அனிதா ஆகியோர் கேள்வி கேட்ட ப்ரோமோக்கள், அதிகம் வைரலாகி இருந்தது. இங்கு 'Fun' இல்லை என ரம்யா சொல்ல, பதிலுக்கு அனிதா மற்றும் தாமரை ஆகியோர், அந்த சுவாரஸ்யம் உருவாக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என கேட்கவே, பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.
சுரேஷ் - தாமரை
இந்நிலையில், இதே போன்று ஒரு ப்ரோமோ, தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் தாமரை ஆகியோர், ஆக்ரோஷத்துடன் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. "பாசமா இருக்குறது வேற. இது ஒரு கேம். இங்க நடக்குறது வெளியே போகும். அப்படிங்கிறது, உங்களுக்கு தெரியும்" என தாமரை சொல்கிறார். பதிலுக்கு சுரேஷ் சக்ரவர்த்தியும், "வெளிய போகும்ன்னு தெரிஞ்ச உனக்கு, வெளியே எப்படி பேசுவாங்கன்னு யோசிக்குறதுக்காக தான் நான் பேசுறேன்" என கூறினார்.
எனக்காக தான் வாழுறேன்
"தாத்தா, எனக்காக தான் நான் வாழுறேன். யாருக்காகவும் நான் வாழல" என தாமரையும் பதிலுக்கு சொல்ல, "அப்புறம் ஏன் கேமரா வழியா வெளிய தெரிஞ்சா என்ன? என்றும் சுரேஷ் வாதிடுகிறார்.
மறுத்த சுரேஷ்
தொடர்ந்து, நீங்கள் கோவப்படுகிறீர்கள் என தாமரை சுரேஷை பார்த்துச் சொல்ல, அதனை ஒத்துக் கொள்ள முடியாமல், மறுத்து எழுந்து செல்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. நாளுக்கு நாள், இது போல பிக்பாஸ் வீட்டில், மாறி மாறி போட்டியாளர்கள் மல்லுக்கட்டும் வீடியோக்கள், அதிகம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
"இப்படி ஒரு நடிகன் கிடைக்கிறது பேரின்பம்" - தனுஷை கட்டிப்பிடித்து பாராட்டிய செல்வராகவன்!