"என்னடா சொன்னே.." நிரூப் பேசிய கொச்சை வார்த்தை..? கொதித்த ஜூலி.. சிம்புவிடம் FANS கோரிக்கை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி இருந்த ஐந்து பிக்பாஸ் சீசன்களும், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.

Advertising
>
Advertising

அல்டிமேட்! சூர்யா - வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’! "உதவி இயக்குநராக" இணையும் பிரபல முன்னணி நடிகர்

இந்த வெற்றிக்கு பிறகு, முந்தைய சீசன்களின் போட்டியாளார்களில் இருந்து சிலரைத் தேர்வு செய்து, பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி, 24 மணி நேரமும் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

எப்போது வேண்டுமானாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியை ரசிகர்களால் பார்க்க முடியும் என்பதால், அடிக்கடி போட்டியாளர்கள் சண்டை போடும் வீடியோக்கள் மற்றும் பதிவுகள், இணையத்தை அதிகம் ஆக்கிரமித்து வருகிறது.

முன்னதாக, சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபிநய், சினேகன் மற்றும் பாலாஜி ஆகியோர் வெளியேறிய நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக வனிதா தாமாக நிகழ்ச்சியில் இருந்து விலகினார். தொடர்ந்து, வைல்டு கார்டு என்ட்ரியில், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் KPY சதீஷ் ஆகியோர் உள்ளே வந்தனர்.

அல்லோலப்படும் பிக்பாஸ் வீடு

இதன் பிறகு, நடிகை ரம்யா பாண்டியனும் உள்ளே வந்தார். முந்தைய சீசன்களில் ஒன்றாக கலந்து கொண்டவர்களும் அதிகம் இருந்த போதும், சண்டைக்கு மட்டும் எந்த பஞ்சமும் வரவில்லை. அனிதா, ஜூலி மற்றும் பாலாஜி உள்ளிட்ட பலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, பல குழுக்களாக பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்கள் பிரிந்து இருப்பது என பிக்பாஸ் வீடே அல்லோலப்பட்டு கிடக்கிறது.

முட்டி மோதிய பாலாஜி - நிரூப்

தொடர்ந்து, நேற்றைய நிகழ்ச்சியின் போது, பாலாஜி மற்றும் நிரூப் மாறி மாறி அடிக்கப் போகும் அளவுக்கு, சண்டை போட்டது பரபரப்பை கிளப்பியிருந்தது. இந்நிலையில், தற்போது ஜூலியை பார்த்து நிரூப் சொன்ன வார்த்தையால், பிக்பாஸ் ரசிகர்கள் கொந்தளித்து போயுள்ளனர்.

கெட்ட வார்த்தை

நிரூப்பை பார்த்து, "நீ பொய் தான் பேசுறே" என ஜூலி சொல்ல, பதிலுக்கு கொச்சை வார்த்தை ஒன்றை நிரூப் கூறினார். இதனைக் கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்த ஜூலி, "என்னடா பேசுனே என்ன பேசுனே. அவ்வளவு தான் உனக்கு" என கேட்டுக் கொண்டே, கதறுகிறார்.

கண் கலங்கும் ஜூலி

உடனடியாக, மற்ற போட்டியாளர்கள் அருகில் வர, "நீ தான் பொய் சொல்லிட்டே இருக்கே. நீ தான் பொய் பேசுறே" என நிரூப் கத்திக் கொண்டே இருக்கிறார். நிரூப்பின் வார்த்தையால் மனமுடைந்த ஜூலி, கண் கலங்கவும் செய்கிறார். இது தொடர்பான ப்ரோமோக்கள், தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் சர்ச்சையை உண்டு பண்ணியுள்ளது.

பிக்பாஸ் ரசிகர்கள் சொல்வது என்ன?

முன்னதாக, ஜூலியிடம் இதே போன்று ஒருமுறை, தவறான வார்த்தையை நிரூப் பயன்படுத்தி இருந்தார். அந்த வகையில், மீண்டும் அது போன்றொரு வார்த்தையை ஜூலியை நோக்கி நிரூப் தெரிவித்துள்ளதால், இது பற்றி சிம்பு நிச்சயம் கேள்வி கேட்க வேண்டும் என ரசிகர்கள், ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கொட்டுங்க டும் டும் டும்!!... திருமண பந்தத்தில் இணையும் பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர்கள்..

தொடர்புடைய இணைப்புகள்

Bb ultimate Fight between julie and niroop fans react

People looking for online information on BB Ultimate, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate, Julie, Niroop, Vijay tv will find this news story useful.