நிரூப்புக்கு துணிச்சலான பதிலடி.. மறுபக்கம் ஆனந்த கண்ணீர்.. ஜூலியால் நெகிழும் ரசிகர்கள்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மெரினா போராட்டம் மூலம், தமிழக மக்கள் மத்தியில் அறியப்பட்டு வந்த ஜூலி, பிக்பாஸ் முதல் சீசனின் முதல் போட்டியாளராக களமிறங்கினார்.

Advertising
>
Advertising

மார்ச் 21 ஆம் தேதி 11.07 மணிக்கு.... செம்ம அப்டேட் கொடுத்த கேஜிஎப் 2 படக்குழு!

இதில், ஜூலி மீது அதிக விமர்சனங்கள் தான் எழுந்து வந்தது. தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகும், அதிக அவமானங்களையும், விமர்சனங்களையும் தான் சந்தித்திருந்தாக ஜூலியே பலமுறை குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது மீண்டும் நுழைந்துள்ள ஜூலி, தன் மீதான விமர்சனத்தை அப்படியே தலைகீழாக மாற்றி போட்டுள்ளார்.

தலைகீழாக மாறிய ஜூலி

தன்னை எதிர்த்து பேசும் போட்டியாளர்களை, மிகவும் கூலாக எதிர்கொண்டு, மிகவம் தேர்ந்த நபர் போல பிக்பாஸ் வீட்டிற்குள் வலம் வருகிறார். அனிதாவுடன் பல முறை நிகழ்ந்த மோதலில், அவரை ஜூலி எதிர்கொண்ட விதம், பிக்பாஸ் ரசிகர்களின் பாராட்டை பெற்றுக் கொடுத்தது.

கூலா ஹேண்டில் பண்றாங்க

அனிதாவை போல, நிரூப்பும் ஒரு பக்கம், ஜூலியிடம் வீம்புக்கு நடந்து கொண்டு வருகிறார். அதிலும், சமீபத்திய எபிசோடில், ஜூலியிடம் கொச்சை வார்த்தை ஒன்றை, நிரூப் பயன்படுத்தி இருந்தது, அதிகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே, என்னை வெளியே அனுப்பும் முயற்சியில் நீ ஈடுபட்டு வருகிறாய் என நிரூப்பிடம் ஜூலி சொல்ல, பதிலுக்கு நிரூப் தன் பக்கமுள்ள நியாயத்தை பேச முயற்சி செய்கிறார்.

நான் இப்டி தான்

ஆனால், அதற்கு ஒரே வார்த்தையில் ஜூலி சொன்ன பதில், ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியிலும், லைக்குகளை அள்ளி வருகிறது. நிரூப்பை 'தொடைநடுங்கி' என ஜூலி சொல்ல, இணையம் முழுக்க இது தொடர்பான பதிவுகளைத் தான் அனைவரும் பகிர்ந்து வந்தனர். பழைய ஜூலி நான் இல்லை என்பது போன்றும், தன் பக்கம் நியாயம் இருந்தால், யாரையும் எதிர்த்து நிற்பேன் என்ற போக்கிலும், மற்ற போட்டியாளர்களுக்கு தக்க பதிலடியை கொடுத்து வருகிறார் ஜூலி.

கண்ணீரே வந்துடுச்சு

ரசிகர்கள் தொடர்ந்து, ஜூலிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், அவரிடம் பாலாஜி சொன்ன வார்த்தைகள் தற்போது ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது. "இத்தனை வருஷம் நீ பட்ட கஷ்டப்பட்டுருக்கே. எல்லாரும் உன்ன திட்டுற மாதிரி அவ்வளவு கெட்ட பொண்ணு ஒண்ணுமில்ல நீ. நிஜமா சொல்றேன், வெளியே போகும் போது நீ எதிர்பார்க்காத அளவுக்கு உனக்கு நல்ல பேரு இருக்கும்.

இந்த வீட்ல எல்லாரையும் கம்பேர் பண்ணா, உனக்கு தான் நல்ல மனசு இருக்கு. இனி லைஃப் ஃபுல்லா ஹாப்பியா இருக்கும். சந்தோஷமா இரு. ஜூலின்னு பேர் சொல்லும் போது, திட்டுனவங்க எல்லாம், இனி ஜூலின்னு பேர் சொல்றப்போ கத்துவாங்க" என ஜூலியை பார்த்து பாலாஜி சொல்கிறார்.

ரசிகர்கள் ஆதரவு

இதனைக் கேட்டதும், கண்ணீர் வடிக்கும் ஜூலிக்கு, ரசிகர்கள் தொடர்ந்து முழு ஆதரவையும் அளித்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில், பலரும் ஜூலியிடம் மல்லுக்கட்டும் நிலையில், பாலாஜி மற்றும் அபிராமி ஆகியோர், தொடர்ந்து ஜூலிக்கு தோள் கொடுத்து வருவது பற்றியும், ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

"வாழ்த்து" சொன்ன தனுஷ்க்கு நன்றி சொல்லி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போட்ட வைரல் பதிவு..

தொடர்புடைய இணைப்புகள்

Bb ultimate fans praising julie for her character won hearts

People looking for online information on BB Ultimate, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate, Bigg Boss Ultimate Tamil, Vijay tv will find this news story useful.