ஹாட்ஸ்டார் தளத்தில் தற்போது 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது 'பிக்பாஸ் அல்டிமேட்' நிகழ்ச்சி.

ஐந்து வாரங்கள் கடந்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில், முந்தைய சீசன்களை தொகுத்து வந்த நடிகர் கமல்ஹாசனுக்கு பதிலாக, தற்போது மற்றொரு நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
வார இறுதியில், சிலம்பரசனின் பதிலடிகளும் ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்குகளை அள்ளி வருகிறது.
மீண்டும் மோதல்கள்
மேலும், 24 மணி நேரமும் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை ரசிகர்கள் பார்க்க முடியும் என்பதால், போட்டியாளர்கள் செய்யும் சிறு சிறு விஷயங்கள் கூட, உடனடியாக இணையத்தில் வைரலடித்து வருகிறது. அந்த வகையில் நடிகை வனிதா பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள், அனிதா - ஜூலி மோதல், பல குழுக்களாக பிரிந்து கொண்ட போட்டியாளர்கள் என பல விஷயங்கள் அதிகம் பேசு பொருளாகி இருந்தது.
அதிர்ச்சி வீடியோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருவது போலவே, அல்டிமேட்டிலும் அதிக சண்டைகள், மாறி மாறி போட்டிகள் நடைபெற தான் செய்கிறது. அந்த வகையில், சமீபத்திய நிகழ்ந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடர்பான வீடியோக்கள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டியாளர் ஜூலி நடந்து சென்று கொண்டிருக்க, திடீரென பின்னால் ஓடி வந்த பாலா, ஜூலியை முதுகில் வேகமாக தட்டினார்.
பதறிய ஹவுஸ்மேட்கள்
இதனை சற்றும் எதிர்பாராத ஜூலி, வலி தாங்க முடியாமல், கத்திக் கொண்டே முதுகினை பிடித்த படி, கீழே அமர்ந்து விடுகிறார். அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட, உடனடியாக மற்ற போட்டியாளர்களும் பதறிய படியே, ஜூலி அருகே சென்றனர். அடுத்த சில நிமிடங்களில், ஜூலி சற்று நார்மலாக, "ஆம்புலன்ஸை கூப்பிடலாமா?" எனக்கூறிய பாலாஜி நக்கல் அடித்துக் கொண்டே இருக்கிறார்.
ரசிகர்கள் கருத்து
இதன் காரணமாக, பிக்பாஸ் வீட்டிற்குள் சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் தொடர்பாக, பிக்பாஸ் ரசிகர்கள் பல விதமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்ட நடிகை ரம்யா பாண்டியன் அல்டிமேட் நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக என்ட்ரி கொடுத்திருந்தது குறிப்ப்பிடத்தக்கது.