டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்தில் தற்போது 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் தமிழ் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஆரம்பித்து சுமார் ஏழு வாரங்கள் வரை ஆகி விட்டது.
முந்தைய பிக்பாஸ் சீசன்களில் ஆடிய போட்டியாளர்களில் இருந்து, பலரை லிஸ்ட் போட்டு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு களமிறக்கி இருக்கிறார்கள். தொடர்ந்து, கடந்த சில தினங்களாகவே பிக்பாஸ் வீடு, பயங்கரமாக சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
ஒரு பக்கம் குழுவாக பிரிந்து கொண்ட போட்டியாளர்கள், மாறி மாறி சண்டை போடுவதும், கொச்சை வார்த்தைகள் பயன்படுத்துவதுமாக பிக்பாஸ் வீடே ரெண்டாகி கிடக்கிறது. மேலும், பிக்பாஸ் ரசிகர்கள் கூட, சில போட்டியாளர்களின் செயல்பாடு பற்றி, அதிக விமர்சனங்களையும் வைத்து வருகின்றனர்.
அனிதாவின் செயல்பாடு
அதிலும் குறிப்பாக, அனிதா கலவையான விமர்சனத்தை பெற்றுவருகிறார். ஜூலியுடன் நடந்த சண்டை, நிரூப்பிடம் கொச்சை வார்த்தைகள் பயன்படுத்தியது, சிம்பு பற்றி பேசிய விஷயம் என தொடர்ந்து பல விஷயத்தில் அனிதாவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் உருவாகி வருகிறது. அதே போல, மற்ற போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அனிதா கவனித்து வந்தது பற்றியும், அதிக கருத்துக்களை ரசிகர்கள் வெளியிட்டு வந்தனர்.
விமர்சிக்கும் நெட்டிசன்கள்
இந்நிலையில், நிரூப் தொடர்பாக அனிதா செய்துவரும் செயல்பாடுகள் தொடர்பான விஷயங்களும் அதிகம் பேசு பொருளாகியுள்ளது. நிரூப் பற்றி யாராவது பேசி விட்டால், நிரூப்புக்கு ஆதரவாக அனிதா தொடர்ந்து பேசி வருகிறார். அப்படி இருக்கும் வேளையில், நிரூப்பிடம் அனிதா பேசும் தன்மை பற்றியும், நெட்டிசன்கள் அதிகம் பேசிவருகின்றனர்.
அப்படி சமீபத்தில், நிரூப்பிடம் செல்லமாக கோபம் கொள்ளும் அனிதா, "இனி நான் சோகமாக இருந்தா உன்கூட பேச மாட்டேன், லிவிங் ரூமில் உன் பக்கத்துல உக்கார மாட்டேன் ஏனா நான் உன் Friend இல்லல" என்று அனிதா பேசியுள்ளது வைரல் ஆகியுள்ளது. மேலும், நிரூப், அனிதாவிடம் "பிரபாவை ரொம்ப லவ் பண்ற தானா" என்று கேட்கவே, அதற்கு சிரித்தபடி, "ஏன் கேக்குறே?" என அனிதா கேட்கிறார்.
இன்னொரு பக்கம், நிரூப் தன்னிடம் பேசவில்லை என்பதற்காக, தாமரையிடம் அனிதா அழுது புலம்பியதாகவும் கூறப்படுகிறது. இப்படி பல முறை, நிரூப் விஷயத்தில், அனிதா கரிசனத்தோடு நடந்து கொள்வதாக ரசிகர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அனிதாவின் செயல்பாடுகளை தொடர்ந்து நிரூப் ஜூலியிடம் பேசிய பேச்சு பற்றியும் அதிக கேள்விகளை ரசிகர்கள் முன் வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.