காலர் டாஸ்க் தவிர நேற்று சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லை. அதனால் அதை வைத்தே பிக்பாஸ் நிகழ்ச்சியை ஓட்டி விட்டார். கண்டெண்ட் இல்லையா? இல்லை இதுவே போதும் என நினைத்தார்களா? என்பது தெரியவில்லை. இதில் போட்டியாளர்கள் தங்களை தாங்களே வரிசைப்படுத்தி கொண்டு நின்றனர். முதல் மூன்று இடங்கள் ஆரி, சனம், பாலாஜிக்கு கிடைத்தது.
அனிதா எனக்கு வேண்டாம் என்று கோபித்துக்கொண்டு சென்று விட்டார். ஆனால் இதற்கு எல்லாம் அசராமல் மணியடித்து அதை முடித்து வைத்த பிக்பாஸ் அடுத்து செம ஆப்பு ஒன்றை வைத்தார். போட்டியாளர்கள் காலர் டாஸ்க்கை சரியாக கையாளவில்லை என்பதால் லக்ஸுரி பட்ஜெட்டில் கைவைத்து விட்டார். இதனால் கிட்டத்தட்ட 2000 பாயிண்டுகள் போய் விட்டது. கடைசியில் வெறும் 600 பாயிண்டுகள் மட்டுமே கிடைத்தது.
காலை தானாக கட் செய்தவர்கள், தன்னைத்தானே நாமினேட் செய்தவர்களுக்கு லக்ஸுரி பட்ஜெட்டை கத்தரித்த பிக்பாஸ் ஆரி, சனம், ரம்யா பாண்டியன் மூவருக்குமே மட்டுமே 600 பாயிண்டுகள் கொடுத்தார். இதனால் ஆரி, சனம் முதல் இரண்டு இடங்களில் நின்றது சரியான முடிவு. ஆனால் பாலாஜி 3-வது இடத்தில் நின்றது தவறு. அந்த இடத்துக்கு ரம்யா தான் பொருத்தமானவர் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.