பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக 'இதுதான்' காரணம்... அனிதா சம்பத் விளக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் தற்போது தொடங்கி இருக்கிறது. மொத்தம் 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்து இருக்கின்றனர். இந்த நிலையில் தான் பிக்பாஸ் சீசனில் என்ன காரணத்திற்காக கலந்து கொண்டேன் என்பதற்கு அனிதா சம்பத் விளக்கம் அளித்திருக்கிறார்.

BB Tamil 4: Why Anitha Sampath entered Bigg Boss house?

பெத்த புள்ளய விட்டுட்டு போற மாதிரி என்னமோ ஒரு கனமான உணர்வு. 7 வருஷமா இந்த கேமரா கூட தான் அதிக நேரம் செலவு பண்ணிருக்கேன். 7 வருஷ செய்தி வாசிப்பு. எனக்கு சோறு போட்ட வேலை மட்டும் இல்ல. நான் நேசிச்ச, நான் ஏங்குன, நான் கனவு கண்ட, எனக்கு புடிச்ச வேலை. உனக்கு அப்புறம் வந்த புது பெண்களெல்லாம், சீரியல், தொடர், அது இது என வளர்ந்துவிட்டார்கள். நீ ஏன் இன்னும் நியூஸையே படித்துக்கொண்டு வளராமல் இருக்கிறாய் என நிறைய பேர் கேட்பார்கள்.

திடீர் ட்ரெண்டிங்குக்கு பிறகு செய்தி வாசிப்பு தவிர பல வாய்ப்புகள் வரும் போதும் அதில் நிறையவே சம்பாதிக்கலாம் என்று தெரிந்தும் நான் எந்த வாய்ப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அடுத்து எடுத்து வைக்கிற அடி நல்ல வாய்ப்பாக நம் மனதுக்கு சரி என்று பட்டால் மட்டும் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2 வருடங்களாக செய்திகளை விடாமல் இருந்தேன். கடைசியாக இப்போதைக்கு ஒரு சின்ன இடைவெளி கொடுக்க வேண்டிய நேரம். நான் பிரம்மித்துப் பார்த்த ஒரு உலக தர கலைஞனின் பக்கதில் நிற்கிற வாய்ப்பு.

 

உலகத்து சினிமாக்காரர்கள் எல்லாம் வாய் பிளந்து வியந்த ஒரு நடிகன் என் பெயரை உச்சரிக்கப் போகிற ஒரு வாய்ப்பு.அவர் பக்கதில் நின்று பேசி இருக்கேன் என்று என் அடுத்த சந்ததியிடம் சொல்லிச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளக் கூடிய ஒரு வாய்ப்பு. வெற்றி பெறுவதெல்லாம் வேற விஷயம். முதலில் இந்த வாய்ப்பு என்பதே அவ்வளவு எளிதில் கிடைக்கக் கூடிய வாய்ப்பு இல்லை. இதை கண்டிப்பாக அனுபவிக்க வேண்டும் என்று தான் இந்த முடிவு. எப்போதும் உங்கள் ஆதரவை எதிர்ப்பார்த்து. உள்ளே. நான் நானாக,'' இவ்வாறு என தெரிவித்து இருக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

BB Tamil 4: Why Anitha Sampath entered Bigg Boss house?

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.