மணிக்கூண்டு டாஸ்க்கில் பாலாஜி, சுச்சி, ரம்யா பாண்டியன் ஆகியோர் ஒரு அணியாக இருக்கின்றனர். ரம்யா இருந்தும் அந்த டீமை காப்பாற்ற முடியவில்லை. பாலாஜி செய்யும் வேலைகளால் இந்த வாரமும் லக்சுரி பட்ஜெட் பறிபோகும் நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் புத்திசாலித்தனமாக நேற்று டாஸ்க்கின் போது பாலாஜி ஒரு வேலை செய்தார்.
அனிதா, சனம் அணியினர் டாஸ்க்கை முடிக்க போகும் நேரத்திலும் பாலாஜி அணி எழுந்து வரவில்லை. அவரை படாதபாடு பட்டு எழுப்பி அழைத்து வந்தால் 3 மணி நேர டாஸ்க்கை 1 மணி நேரம் 26 மணி நேரத்தில் முடித்து விட்டு சென்று விட்டார். பாலாஜியின் இந்த வேலையை பார்த்து பிக்பாஸே லேசாக ஜெர்க் ஆகி இருப்பார். இதைப்பார்த்த ரசிகர்களும் ஷாக் ஆகிவிட்டனர்.
அவரால் நிற்க முடியவில்லை என்பதற்காக இப்படி செய்து விட்டு சென்று விட்டாரே, அவ்வளவு அவசரமாக ஏன் முடித்தார்? என கேள்வி எழுப்பி வருகின்றனர். மற்ற அனைத்து அணிகளும் சீரியஸாக டாஸ்க்கை செய்து வரும்போது பாலாஜி இப்படி செய்ததை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பத்திரம் டாஸ்க்கையும் இப்படித்தான் பாலாஜி செய்து கமலிடம் மாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.