இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வலிமையான போட்டியாளர்களில் ஒருவராக பாலாஜி முருகதாஸ் திகழ்கிறார். வெளிப்படையாக பேசினாலும் அவரது அனைத்து உத்திகளும் பிக்பாஸ் டைட்டிலை நோக்கி இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாலாஜி-அர்ச்சனா இருவரும் கைகோர்த்தது அவரது ராஜதந்திரங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு சீசன் ஆரம்பிக்கும் போதும் அதற்கு முன் இருந்த போட்டியாளர்களுடன் தற்போதைய போட்டியாளர்களை ஒப்பிட்டு பார்ப்பது ரசிகர்களின் வழக்கமாக இருக்கிறது. அதன்படி இந்த சீசன் போட்டியாளர்களில் ஒருவரான, பாலாஜி முருகதாஸை கடந்த சீசன் போட்டியாளரும், டைட்டில் வின்னருமான முகேன் ராவ் உடன் ரசிகர்கள் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்து இருக்கின்றனர்.
கடந்த சீசனில் அன்பு ஒன்று தான் அனாதை என சொன்ன முகேன் இறுதியில் டைட்டில் வின் செய்தார். அதேபோல இந்த சீசனில் அன்பு காட்ட எனக்கு யாருமே இல்லை என பாலாஜி முருகதாஸ் சொல்லி வருகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் இதை சொல்லியே டைட்டில் வின் பண்ணிடுவாரோ? என வேலையில்லா பட்டதாரி படத்தின் மீம்ஸை போட்டு கலாய்த்து வருகின்றனர்.